பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21.08.2023, திங்கள்
21.08.2023, திங்கள்
திருக்குறள்
விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்
பொருள்
கற்றவர்க்கும் கல்லாதவர்க்கும் இடையே உள்ள வேறுபாடானது, மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது.
பழமொழி
Every tide has its ebb.
ஏற்றம் உண்டானால் இறக்கம் உண்டு
பொன்மொழி
தனிமையாக இருக்கும்போது
வேலையின்றி சும்மா இருக்காதே!
வேலையின்றி சும்மா இருக்கும்போது
தனிமையாக இருக்காதே! - சாமுவேல் ஜான்சன்
பொதுஅறிவு
பாரதியாருக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர் யார்?
வ.ராமசாமி
இன்றைய முக்கியச் செய்திகள்
* நீட் தடுப்புச் சுவர் உடைபடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என தமிழக முதலமைச்சர் பேச்சு.
* சந்திராயன் - 3 விண்கலத்தில் இறுதி வேகக் குறைப்பு செயல்பாடு வெற்றி.
* தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்தமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.
* பெண்கள் உலகக்கோப்பைக் கால்பந்து போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ஸ்பெயின்.
* அயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா.
Today's Headlines
* The Chief Minister of Tamil Nadu said that the time when the barrier to NEET will be broken is not far away.
* Successful final deceleration operation on Chandrayaan-3 spacecraft.
* Heavy rain is likely to occur in Tamil Nadu today and tomorrow, according to the Chennai Meteorological Department.
* Spain beat England to win Women's World Cup
* India won the second T20I against Ireland to clinch the
series.
கருத்துகள்
கருத்துரையிடுக