பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 24.08.2023, வியாழன்
24.08.2023, வியாழன்
திருக்குறள்
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி
பொருள்
துலாக்கோல் போல சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும்.
பழமொழி
Do Well What you have to do.
செய்வன திருந்தச் செய்.
பொன்மொழி
பொறுமை கசக்கும்; ஆனால் அதன்மூலம் கிடைக்கும் பலன் இனிக்கும்.
- ரூஸோ
பொதுஅறிவு
ஒரு பைசாத்தமிழன் என்னும் வாரஇதழை நடத்தியவர் யார்?
அயோத்திதாசர்
இன்றைய முக்கியச் செய்திகள்
* சந்திராயன் - 3 வெற்றி ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது என பிரதமர் மோடி பெருமிதம்.
* தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பி.வீரமுத்துவேல் முக்கிய விஞ்ஞானியாக சந்திராயன் - 3 திட்டத்தில் பணியாற்றியுள்ளார்.
* ஓணம் பண்டிகையை முன்னிட்டு இடுக்கி அணையைப் பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.
* இமாச்சல பிரதேச மழை பாதிப்பிற்கு தமிழக அரசு 10 கோடி நிதியுதவி அளித்துள்ளது.
* உலகக்கோப்பை சதுரங்கப் போட்டியின் இரண்டாவது சுற்றையும் சமனில் முடித்தார் இந்தியாவின் பிரக்ஞானந்தா.
Today's Headlines
* Prime Minister Modi is proud that Chandrayaan-3 victory belongs to the entire humanity.
* B. Weeramuthuvel from Villupuram district of Tamil Nadu has worked as a key scientist in Chandrayaan-3 project.
* Tourists allowed to visit Idukki Dam on the occasion of Onam festival.
* Government of Tamil Nadu has given 10 crore financial
assistance to Himachal Pradesh rain affected.
* India's Pragnananda finished the second round of the World
Cup chess tournament in a draw.
கருத்துகள்
கருத்துரையிடுக