பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 25.08.2023, வெள்ளி

 25.08.2023, வெள்ளி

திருக்குறள்

தன்னுயிர்  நீப்பினும்  செய்யற்க  தான்பிறிது

இன்னுயிர்  நீக்கும்  வினை.

பொருள்

தனது உயிரே போவதானாலும் பிறவற்றின் உயிரை நீக்கும் செயலைச் செய்யக்கூடாது.

பழமொழி

Bare words buy no barley.

ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.

பொன்மொழி

உன்னை சுற்றியுள்ளவர்களை நீ மாற்றியமைக்க முடியாது. ஆனால் உன்னைச் சுற்றி யார் இருக்க வேண்டும் என்பதை நீ மாற்றியமைக்கலாம்.

பொதுஅறிவு

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் நாட்டுப் பற்றுடன் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்த விளங்கிட தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?

சிற்பி

இன்றைய முக்கியச் செய்திகள்

* நிலவில் திட்டமிட்டபடி ஆராய்ச்சியைத் தொடங்கியது பிரக்யான் ரோவர் - இஸ்ரோ அறிவிப்பு.

* காலை உணவுத்திட்டம் தமிழகம் முழுவதும் விரிவாக்கம். முதலமைச்சர் திருக்குவளை பள்ளியில் தொடங்கி வைக்கிறார்.

* இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல்.

* ஆந்திரா மாநிலம் நெல்லூர் அருகே 450க்கும் மேற்பட்ட விஜயநகர காசுகள் கண்டுபிடிப்பு.

* கர்நாடக அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் நீர் திறப்பு 11,720 கனஅடியாக அதிகரிப்பு.

* உலகக்கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தாவை முதலமைச்சர் பாராட்டினார்.

Today's Headlines

* Pragyaan rover begins exploration of moon as planned - ISRO announcement

* Expansion of breakfast program across Tamil Nadu. Chief Minister inaugurates at Thirukkuvala School.

* Meteorological Center informs that temperature may increase today and tomorrow.

* More than 450 Vijayanagara coins found near Nellore, Andhra Pradesh.

* Increase in release of water from Karnataka dams to Cauvery river to 11,720 cubic feet.

* The Chief Minister praised Pragnananda who finished second in the World Cup Chess Tournament.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்