பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 05.09.2023, செவ்வாய்
05.09.2023, செவ்வாய்
திருக்குறள்
செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்
பொருள்
ஒருவன் செய்யக் கூடாத செயலைச் செய்தால் கெடுவான்.
செய்யக் கூடிய செயலைச் செய்யாவிட்டாலும் கெடுவான்.
பழமொழி
No smoke without fire.
நெருப்பின்றி புகையாது.
பொன்மொழி
உலகின் புனிதமான இடங்கள் இரண்டு. ஒன்று தாயின் கருவறையில் உயிர் பெறுகிறோம். இரண்டு ஆசிரியரின் வகுப்பறையில் அறிவைப் பெறுகிறோம். ஏ.பி.ஜே அப்துல்கலாம்.
பொதுஅறிவு
எவரெஸ்ட்டில் கால்வைத்த உலகின் முதல் மாற்றுத்திறனாளிப் பெண் யார்?
அருணிமா சின்ஹா
இன்றைய முக்கியச் செய்திகள்
* பி.இ மற்றும் பி.டெக் படிப்புகளுக்கான 3 வது சுற்று கலந்தாய்வு முடிந்த நிலையில் 50,000 இடங்கள் காலியாக உள்ளன.
* தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது.
* 6 மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
* உறக்க நிலைக்க சென்றது லேண்டர். செப்டம்பர் 22 ஆம் தேதி விழிப்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என இஸ்ரோ அறிவிப்பு.
* வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது.
* ஆசியகோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி.
Today's Headlines
* 50,000 seats are vacant after 3rd round of counseling for PE and B.Tech courses.
* Tamilnadu school education department is giving good teacher award to 386 people today.
* Chief Minister M.K. Stalin gave relief fund for 6 district farmers.
* The lander went to sleep. ISRO announced that it will be alerted on September 22.
* A low pressure area will develop over the Bay of Bengal
tomorrow.
* The Indian team advanced to the Super 4 round of the Asia
Cup cricket tournament.
கருத்துகள்
கருத்துரையிடுக