பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 07.09.2023, வியாழன்
07.09.2023, வியாழன்
திருக்குறள்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
பொருள்
முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாது என்பவர் சிறியோர்.
பழமொழி
EXPERIENCE IS THE BEST TEACHER
அனுபவமே சிறந்த ஆசான்.
பொன்மொழி
எதையும் எதிர்கொள்வேன் என்ற மனநிலை மட்டுமே நம்பிக்கையைத் தந்து வெற்றியையும் தரும்.
பொதுஅறிவு
43 வது ஆசியான் உச்சி மாநாடு எந்த நாட்டில் நடைபெறுகிறது?
இந்தோஷினியா
இன்றைய முக்கியச் செய்திகள்
* நடப்பாண்டு தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வுக்கு பதினோராம் வகுப்பு மாணவர்கள் வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
* குக்கர், குடிநீர் பாட்டில்களுக்கு ஐ.எஸ்.ஐ தர குறியீடு கட்டாயம் என இந்திய தர ஆணையம் அறிவிப்பு.
* பிரபஞ்சத்தில் இன்னொரு பூமி உள்ளதாக ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு.
* மனிதர்களை செவ்வாய்க்கு அழைத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் தயார் நிலையில் உள்ளது.
* ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசையில் சுப்மன் கில் மூன்றாம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
TODAY'S HEADLINES
* Class XI students should apply
for the current year's Tamil Language Literacy Test by the 20th.
* Standard Commission of India
notification that ISI quality code is mandatory for cookers and drinking water
bottles.
* Japanese scientists discovered that there is another Earth in the universe.
* The SpaceX spacecraft is ready
to take humans to Mars.
* Subman Gill has moved up to third position in the OD1 Ranking.
கருத்துகள்
கருத்துரையிடுக