பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 08.09.2023, வெள்ளி

 08.09.2023, வெள்ளி

திருக்குறள்

நிலத்தில்  கிடந்தமை  கால்காட்டும்  காட்டும்

குலத்தில்  பிறந்தார்வாய்ச்  சொல்

பொருள்

நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.

பழமொழி

Familiarity breeds contempt.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

பொன்மொழி

உலகில் உள்ள மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி; இகழ்ந்தாலும் சரி; நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும். - சுவாமி விவேகானந்தர்.

பொதுஅறிவு

சூரிய குடும்பத்தைக் கண்டறிந்தவர் யார்?

கோபர் நிக்கஸ்

இன்றைய முக்கியச் செய்திகள்

* ஜி-20 தலைவர்களை வரவேற்க தயார் நிலையில் இந்தியா உள்ளது.

* பூமி - நிலவுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டது ஆதித்யா ட1.

* கச்சா எண்ணெய் உயர்வால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளது.

* தமிழகத்தில் ஒமைக்ரானில் இருந்து 2 புதிய வகை வைரஸ் உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் கண்டுபிடிப்பு.

* இந்தியா வம்சாவளி என்பதில் பெருமை கொள்வதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

Today's Headlines

* India is ready to welcome G-20 leaders.

* Aditya L1 took a selfie with Bhoomi and Moon.

* Prices of petrol and diesel are likely to rise due to rise in crude oil.

* Doctors discovered that 2 new types of virus have developed from Omicron in Tamil Nadu.

* British Prime Minister Rishi Sunak has said that he is proud to be of Indian origin.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்