பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 11-09-2023, திங்கள்

 11.09.2023, திங்கள்

திருக்குறள்

உறுவது  சீர்தூக்கும்  நட்பும்  பெறுவது

கொள்வாரும்  கள்வரும்  நேர்.

பொருள்

தமக்கு வரும் பயன் ஒன்றையே எதிர்பார்க்கும் நண்பரும் களவு செய்யும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்கள்.

பழமொழி

Better the foot slip than the tongue.

கால் பிறழ்ந்தாலும் நாப் பிறழாதே.

பொன்மொழி

மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை. அது போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது.

பொதுஅறிவு

இந்தியாவின் வன மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜாதவ் பயேங்க்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* வடஆப்பரிக்க நாடான மொராக்கோவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்பலி ஆயிரத்தைத் தாண்டியது.

* காவிரி நதிநீர் ஒழுங்காற்று கமிட்டியிடம் தமிழக அரசு 12 ஆம் தேதி புகார் அளிக்க முடிவு.

* சென்னை அருகே சுரங்கப்பணியால் திருப்பதி, பெங்களூர் செல்லும் 14 ரயில்கள் ரத்து.

* டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில்  ரூபாய் 100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்.

* ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் ஆட்டம் மழையால் பாதிப்பு.

Today's Headlines

* The death toll due to the earthquake in the North African country of Moroco has exceeded 20 thousnad.

* The cauvery River Management Committee is held by the Government of Taamilnadu Decided to lodge compliant on 12th.

* Mining work near Chennai: 14 express trains to Tirupathi, Bangaore cancelled.

* 100 Crore Kaliagner Research Center Minister at Dr, M G R Medical University Minister M.Subramanian informed.

* Asiacup cricket match between India and Pakistan was affected by rain.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்