பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.09.2023, புதன்
13.09.2023, புதன்
திருக்குறள்
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
பொருள்
தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.
பழமொழி
Choose an author as you choose a friend.
நல்ல நூல் நல்ல நண்பன்.
பொன்மொழி
கடந்த காலத்திலிருந்து பாடம் கற்று, எதிர்காலத்திற்கான இலக்கை தெளிவாகவும், விரிவாகவும் அமைத்திடுங்கள்.
பொதுஅறிவு
பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் வகையின் பெயர் என்ன?
வைட்டமின் பி9.
இன்றைய முக்கியச் செய்திகள்
* விவசாயிகளின் உரிமைகளையும், அவர்களது எதிர்காலத்தையும் பாதுகாப்பது நமது கடமை - குடியரசுத் தலைவர் திருமதி.முர்மு.
* மழைக்காலத்தில் மாணவர்கள் பாதுகாப்பிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்.
* அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு நாளை வரை விண்ணப்பிக்கலாம்.
* சென்னையில் வேகமாக பரவுகிறது மெட்ராஸ் - ஐ. 12 இலட்சம் மாணவர்களுக்கு பரிசோதனை நடத்த அமைச்சர் உத்தரவு.
* நிலவில் உறக்க நிலையில் இருக்கும் லேண்டர், ரோவர் வரும் 22 ஆம் தேதி செயல்படும் என இஸ்ரோ அறிவிப்பு.
* ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது இந்திய அணி.
Today's Headlines
* It's our duty to protect the rights of farmers and their future - president Mrs.Draupadi murmu.
* Precautionary measures for safety of students during rainy season - Instruction of School Education Department.
* First year students can apply for admission in government colleges till tomorrow.
* Madras - I. is spreading rapidly in Chennai. Minister orders to conduct examination for 12 lakh students.
* ISRO announced that the lander and rover, which are sleeping on the moon, will be operational on the 22nd.
* India beat Sri Lanka in the Asia Cup cricket tournament and
qualified for the final match.
கருத்துகள்
கருத்துரையிடுக