பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 14.09.2023, வியாழன்
14.09.2023, வியாழன்
திருக்குறள்
நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல்
பொருள்
நிலத்தின் இயல்பை அதில் தோன்றிய தாவரம் அறிவிக்கும். அதுபோல நல்ல குடியில் பிறந்தவரின் இயல்பை அவர்கள் வாய்மொழியே காட்டி விடும்.
பழமொழி
Familiarity breeds contempt.
பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
பொன்மொழி
உலகில் உள்ள மக்கள் உன்னைப் புகழ்ந்தாலும் சரி; இகழ்ந்தாலும் சரி; நீ உண்மை என்னும் பாதையிலிருந்து அணுவளவும் பிறழாமல் கவனமாக இருக்க வேண்டும். - சுவாமி விவேகானந்தர்.
பொதுஅறிவு
சூரிய குடும்பத்தைக் கண்டறிந்தவர் யார்?
கோபர் நிக்கஸ்
இன்றைய முக்கியச் செய்திகள்
* கேரளாவில் நிபா வைரஸ் எதிரொலி - தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
* மகளிர் உரிமைத்தொகைக்கு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
* பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த முடிவு.
* 4 மாவட்டங்களில் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து 2 நாட்களில் ஆலோசனை நடத்துகிறார் தமிழக முதலமைச்சர்.
* தமிழக சட்டசவை அடுத்த மாதம் கூடுகிறது. 5 நாட்கள் நடத்தப்படும் என தகவல்.
* வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
* ஐ.சி.சி கிரிக்கெட் தரவரிசையில் டாப் மூன்று இடங்களில் இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
Today's Headlines
* Nipah virus reverberations in Kerala – Tamil Nadu Government issues guidelines.
*Applicants who are not accepted for women's allowance can appeal.
* Decision to hold an all-party meeting ahead of the special session of Parliament.
* The Chief Minister of Tamil Nadu will hold a consultation on development projects in 4 districts in 2 days.
* The Tamil Nadu Legislative Assembly will meet next month. Information to be held for 5 days.
* A new low pressure area has formed over the Bay of Bengal. India Meteorological Department information.
* Indian players occupy the top three spots in the ICC
Cricket Rankings.
கருத்துகள்
கருத்துரையிடுக