பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.09.2023, வெள்ளி
15.09.2023, வெள்ளி
திருக்குறள்
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்
தியற்கை அறிந்து செயல்
பொருள்
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல்வழியாக அறிந்திருப்பினும் உலகியல் நடைமுறைகளை அறிந்து செயல்பட வேண்டும்.
Laughter is the best medicine
வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்.
பொன்மொழி
குறை சொன்னது யார் என்று இரண்டாவதாக பார்.
சொல்லப்பட்ட குறை உன்னிடம் உள்ளதா என்பதை முதலில் பார்.
பொதுஅறிவு
இந்தியாவின் ஷேக்ஸ்பியர் என்று அழைக்கப்படுபவர் யார்?
காளிதாசர்
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழக மீனவர்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்.
* தமிழகத்தில் முதன்முறையாக 3 பெண்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர் ஆனார்கள்.
* மகளிர் உரிமைத்தொகைக்கு பிரத்யேக ஏ.டி.எம் கார்டு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார் தமிழக முதலமைச்சர்.
* தமிழகத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.
* சிங்கப்பூரின் 9-வது அதிபராக பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்.
Today's Headlines
* Tamil Nadu Chief Minister's letter to Central Government to take necessary steps to release Tamil Nadu fishermen.
கருத்துகள்
கருத்துரையிடுக