பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 19.09.2023, செவ்வாய்
19.09.2023, செவ்வாய்
திருக்குறள்
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
பொருள்
நடுவு நிலைமை உடையவர், நடுவு நிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.
பழமொழி
A Cat may look at a king.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.
பொன்மொழி
வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை. அதை எப்போதும் வளர்த்துக்கொள்.
பொதுஅறிவு
ஆசியாவின் மிகப்பெரிய பட்டாம்பூச்சி பூங்கா எங்குள்ளது?
திருச்சி
இன்றைய முக்கியச் செய்திகள்
► 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு இன்று தொடக்கம். பொதுவான வினாத்தாள் முறை மீண்டும் நடைமுறுத்தப்படுகிறது.
► விடைபெற்றது பாராளுமன்ற பழைய கட்டிடம். புதிய கட்டிடத்தில் கூட்டம் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.
► தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடாக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.
► உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பிடித்தது சாந்தி நிகேதன் - யுனெஸ்கோ அறிவிப்பு.
► ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி மும்பை திரும்பியது.- விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு.
Today's Headlines
► Quarterly examination for class 6 to 10 students starts today. A common
question paper system is being implemented again.
► Bid farewell to the old Parliament building. The crowd in the new building starts today with a bang.
► Cauvery Management Authority orders Karnataka government to release water to Tamil Nadu.
► Shanti Niketan - UNESCO announcement on World Heritage List.
► Indian cricket team returns to Mumbai after winning Asia cup - A Warm welcome at the airport.
கருத்துகள்
கருத்துரையிடுக