பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 01.11.2023, புதன்
01.11.2023, புதன்
திருக்குறள்
கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து
பொருள்
வாய்ப்பற்ற காலத்தில் கொக்கைப்போல் அமைதியாகக் காத்திருத்தல் வேண்டும். உரிய காலம் வாய்த்ததும்
கொக்கைப்போல் விரைந்து செயலைச் செய்து முடித்தல் வேண்டும்.பழமொழி
LITTLE STROKES FELL GREAT OAKS
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
பொன்மொழி
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்காதே! ஏனெனில் அந்த வழியில் நீ திரும்பப் போவதில்லை.
பொதுஅறிவு
தமிழ்நாட்டில் மஞ்சள் சந்தை நடைபெறும் மாவட்டம் எது?
ஈரோடு
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 தமிழ்நாட்டில் தொழில்புரட்சி உருவாகி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்.
💥 இளைஞர்களின் மேம்பாட்டுக்கான ‘எனது இளைய பாரம்’ என்னும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
💥 படேலின் வழியில் சென்று ஒற்றுமையை வலுப்படுத்துவோம் என பிரதமர் மோடி பேச்சு.
💥 இந்தியாவின் முதல் இரயில் சென்னையில் தயாரிக்கப்படுகிறது.
💥 தமிழகத்தில அடுத்த மூன்று நாளைக்கு மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல்.
💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது பாகிஸ்தான்.
TODAY'S HEADLINES
💥 Chief Minister M. K. Stalin proud that industrial revolution is taking place in Tamil Nadu.
Prime Minister Modi has launched a scheme for the development of the youth called 'Enathu Ilaiya Bharatham'.
💥 Prime Minister Modi said that we will strengthen unity by following the path of Patel.
💥 India's first train is manufactured in Chennai.
💥 Tamil Nadu is likely to receive rain for the next three days, according to the Chennai Meteorological Department.
💥 Pakistan beat Bangladesh in World Cup cricket match.
கருத்துகள்
கருத்துரையிடுக