பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.10.2023, செவ்வாய்

  03.10.2023, செவ்வாய்

திருக்குறள்

வினையால்  வினையாக்கிக்  கோடல்  நனைகவுள்

யானையால்  யானையாத்   தற்று

பொருள்

ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

பழமொழி

A Guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

பொன்மொழி

தன் வலிமையைக் கணித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்.

பொதுஅறிவு

இந்தியாவின் மிக அதிவேக இரயில் எது?

வந்தே பாரத்.

இன்றைய முக்கியச் செய்திகள்

* மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவதால் கிராமப் பகுதிகளில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் பேச்சு.

* மகாத்மா காந்தியின் 155 வது பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு தமிழக கவர்னர் மற்றும் முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்கள்.

* தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா 25 இலட்சம் பரிசுத்தொகையை அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

* காலாண்டு விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேலும் 2 பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா. இதுவரை இந்தியா 56 பதக்கங்களை வென்றுள்ளது.

Today's Headlines

* Tamil Nadu Chief Minister's speech that money flow has increased in rural areas due to providing Rs 1000 per month to a girl child.

* On the occasion of Mahatma Gandhi's 155th birth anniversary, Tamil Nadu Governor and Chief Minister paid homage to his portrait.

* Chief Minister Stalin announced prize money of 25 lakhs each to 9 scientists of Tamil Nadu.

* Schools in Tamil Nadu will open today after the quarter vacation.

* India won 2 more medals in Asian Games. So far India has won 56 medals.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்