பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 04.10.2023, புதன்
04.10.2023, புதன்
திருக்குறள்
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்.
பொருள்
உள்ளத்தில் பொய் இல்லாமல் வாழ்பவர், உலகத்தார் உள்ளங்களில் எல்லாம் இருப்பவர் ஆவார்.
பழமொழி
Single tree makes no forest
தனிமரம் தோப்பாகாது.
பொன்மொழி
சொல்லாத வார்த்தைகளுக்கு நாமே முதலாளி. ஆனால் சொல்லப்பட்ட வார்த்தைகளுக்கு நாம் அடிமை. - வின்ஸ்டன் சர்ச்சில்.
பொதுஅறிவு
இந்திய விமானப்படையில் முதல் பெண் போர் விமானி யார்?
அவனி சதுர்வேதி
இன்றைய முக்கியச் செய்திகள்
* முதலமைச்சர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கான இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
* தூங்கும் வகதியுடைய வந்தே பாரத் ரயிலை இன்னும் சில மாதங்களில் இயக்க முடிவு. ரெயில்வே அமைச்சகம் தகவல்.
* வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான்களை பார்க்க சிறப்பு வசதி. அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.
* ஐந்து மாநில சட்டசபை தேர்தல் தேதி இந்த வாரம் அறிவிப்பு.
* ஆசிய விளையாட்டுப் போட்டியில் கேனோ பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
Today's Headlines
* Two-day conference for District Collectors and Superintendents of Police under the leadership of the Chief Minister started yesterday.
* Decision to start sleeper Vande Bharat train in few months. Ministry of Railways information.
* Special facility to see lion and deer in Vandalur Park. Minister Madivendan inaugurated.
* Five state assembly election date announcement this week.
* India won bronze in canoe category at Asian Games.
கருத்துகள்
கருத்துரையிடுக