பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 09.10.2023, திங்கள்
09.10.2023, திங்கள்
திருக்குறள்
கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.
பொருள்
கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.
பழமொழி
A Cat may look at a king.
யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும்.
பொன்மொழி
வெற்றி எனும் உயரத்தை அடைய ஏணியாக இருக்கும் ஆயுதம் தான் தன்னம்பிக்கை. அதை எப்போதும் வளர்த்துக்கொள்.
பொதுஅறிவு
நடப்பு ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றவர் யார்?
ஜான் ஃபோஸ்
இன்றைய முக்கியச் செய்திகள்
► தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் 9 ஆம் தேதி தொடக்கம்.
► தமிழகத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் இன்று தொடக்கம்.
► ஆதித்யா எல் 1 விண்ணில் வெற்றிகரமாக பயணிப்பதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
► இஸ்ரேலில் போர் பதற்றம் நிலவுவதால் 14 ஆம் தேதி வரை விமான சேவை ரத்து.
► ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 107 பதக்கங்களை வென்றுள்ளது.
► உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது.
Today's Headlines
► Flight
service canceled till 14th due to war tension in Israel.
கருத்துகள்
கருத்துரையிடுக