பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 13.10.2023, வெள்ளி

13.10.2023, வெள்ளி

திருக்குறள்

மறந்தும்  பிறன்கேடு  சூழற்க  சூழின்

அறஞ்சூழும்  சூழ்ந்தவன் கேடு

பொருள்

மறந்தும்கூடப் பிறருக்குக் கெடுதல் செய்ய நினைக்கக் கூடாது. நினைத்தால், நினைத்தவருக்குக் கெடுதல் செய்ய அறம் நினைக்கும்.

பழமொழி

EVERY PLEASURE HAS A PAIN

எல்லா இன்பத்துப் பின் ஒரு துன்பம் உண்டு.

பொன்மொழி

நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் - அறிஞர் அண்ணா.

பொதுஅறிவு

ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் எது?

தஞ்சை சரசுவதி மகால் நூலகம்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய 2250 கிராம செவிலியர்களை நியமிக்க தமிழக அரசு ஏற்பாடு.

💥 மதுரை சிங்கப்பூர் இடையே தினசரி விமான சேவையை வரும் 22 ஆம் தேதி முதல் தொடங்குகிறது - ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்

💥 அண்ணா பிறந்த நாளையொட்டி வரும் 14 ஆம் தேதி மாணவ மாணவிகளுக்கு சைக்கிள் பந்தயம் - சென்னை மாநகராட்சி அறிவிப்பு.

💥 வேகமாக பரவும் புரூசெல்லோசிஸ் நோய். பாலை நன்றாக காய்ச்சி பயன்படுத்த அறிவுறுத்தல்.

💥 தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வராததால் வடகிழக்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம்.

💥 உலகக்கோப்பைக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா.

TODAY'S HEADLINES

💥 Government of Tamil Nadu is planning to appoint 2250 village nurses to work in primary health centers.

💥 Daily flight service between Madurai and Singapore will start from 22nd - Air India Express

💥 On the occasion of Anna's birthday, bicycle race for students on 14th - Announcement of Chennai Corporation.

💥 Brucellosis is a rapidly spreading disease. Instructions to use well boiled milk.

💥 Delay in onset of North East Monsoon as Southwest Monsoon has not ended.

💥 South Africa defeated Australia in World Cup cricket.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்