பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 16.10.2023, திங்கள்

 16-10-2023, திங்கள்

திருக்குறள்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு

பொருள் 

பற்றில்லாதவனுடைய பற்றப் பற்ற வேண்டும். மற்ற பற்றுகளை விட்டொழிப்பதற்கு அப்பற்றைப் பற்ற வேண்டும்.

பழமொழி 

There is danger in men's smile

நம்மை வணங்கும் கைகளிலும் பகை ஒளிந்திருக்கும்.

பொன்மொழி

சொல்லில் இனிமை இருந்தால் வேப்ப எண்ணையை கூட விற்று விடலாம். சொல்லில் கடுமை இருந்தால் தேன் கூட விற்க முடியாது.


பொது அறிவு

யூனியன் பிரதேசங்கள் யாருடைய ஆளுகைக்கு உட்பட்டது?

குடியரசுத்தலைவர்.


இன்றைய செய்திகள்

💥 அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 7 அடி உயர சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.

💥 தமிழகம் முழுவதும் பள்ளிகளில் இன்று குழந்தைத் திருமணம் தடுப்பு உறுதிமொழி எடுக்கு அறிவுறுத்தியுள்ளது சமூக நலத்துறை.

💥 தேசிய கல்விக் கொள்கையின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு நிரந்தர அடையாள எண் திட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது.

💥 2024 க்கான கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இந்தியாவிலிருந்து 60 சாதனைகள் இடம்பெற்றுள்ளன.

💥 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

TODAY'S HEADLINES

💥 Chief Minister Stalin inaugurated a 7 feet tall statue of Abdul Kalam in Anna University on his birthday.

💥 The social welfare department has advised schools across Tamil Nadu to take a pledge to prevent child marriage today.

💥 Permanent Identification Number scheme for school students under National Education Policy is coming soon.

💥 Guinness Book of World Records for 2024 features 60 records from India.

💥 Afghanistan won the World Cup cricket match by defeating the current champion England.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்