பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.10.2023, செவ்வாய்
17.10.2023, செவ்வாய்
திருக்குறள்
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்
பொருள்
துன்பத்தில் மனக்கசப்பு என்னும் மோசமான துன்பம் மறைந்தால் இன்பத்தில் சிறந்த இன்பம் பெறலாம்.
பழமொழி
LET EVERY MAN PRAISE THE BRIDGE HE GOES EVER
உப்பிட்டவரை உள்ளளவும் நினை.
பொன்மொழி
அதிகாலை நீ நினைத்த நேரத்தில் எழுந்து விட்டாலே தோல்விகள் உன்னை விட்டு ஒதுங்கிவிடும். - ஏ.பி.ஜே அப்துல்கலாம்.
பொதுஅறிவு
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது?
கன்னிமாரா நூலகம்.
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் சோதனை ஓட்டம் வரும் 21 ஆம் தேதி நிகழ்கிறது.
💥 தமிழக மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
💥 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
💥 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உட்பட ஐந்து விளையாட்டுகள் இணைப்பு.
💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
TODAY'S HEADLINES
💥 The test run of the Gaganyaan project to send humans into space will take place on the 21st.
💥 The central government should take action to release the fishermen of Tamil Nadu. Chief Minister M.K.Stalin letter.
💥 Tamil Nadu and Puducherry may experience light to moderate rains from 18th to 22nd.
💥 Five sports, including cricket, have been added to the Olympics in 2028.
கருத்துகள்
கருத்துரையிடுக