பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 20.10.2023, வெள்ளி
20.10.2023, வெள்ளி
திருக்குறள்
துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
பொருள்
வரம்புகடந்து பேசுவோரின் தீய சொற்களையும் பொறுத்துக்கொள்பவரே பற்றற்ற துறவியரினும் மேலானவர்.
பழமொழி
As is the mother, so is her daughter\
தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போல சேலை
பொன்மொழி
ஜனநாயகத்தில் வலிமை பெற்றவருக்கும் வலிமையற்றவருக்கும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும். - மகாத்மா காந்தி
பொதுஅறிவு
இந்தியாவில் பெண்களுக்கான முதல் இரயில் நிலையம் எது?
மாதுங்கா (மும்பை)
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 கேரளாவில் அனைத்துப் பேருந்துகளிலும் 31 ஆம் தேதிக்குள் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்படும்.
💥 காசாவில் இருந்து தற்போது இந்தியர்களை வெளியேற்றுவது கடினம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தகவல்.
💥 ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்கு சென்னையிலிருந்து வெளியூருக்கு ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
💥 தென்மேற்கு பருவக்காற்று விலகிவிட்டது. இன்னும் 3 நாட்களில் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகும்.
💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.
TODAY'S HEADLINES
💥 All buses in Kerala will be fitted with CCTV cameras by 31st.
💥 Union Minister of External Affairs informed that it is difficult to evacuate Indians from Gaza at present.
💥 1000 special buses will be run from Chennai to outside areas for Ayudha Puja holiday.
💥 Southwest Monsoon has left. Northeast Monsoon will start in 3 days.
💥 India won the Cricket
World Cup by defeating Bangladesh.
கருத்துகள்
கருத்துரையிடுக