பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 25.10.2023, புதன்

 25.10.2023, புதன்

திருக்குறள்

தக்கார்  தகவிலர்  என்பது  அவரவர்

எச்சத்தால்  காணப்  படும்.

பொருள்

நடுவுநிலைமை உடையவர், நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவருக்குப் பின் எஞ்சி நிற்கும் புகழினாலும் பழியினாலும் அறியப்படும்.

பழமொழி

ONE FLOWER MAKES NO GARLAND

தனிமரம் தோப்பாகாது.

பொன்மொழி

மனவுறுதி இல்லாதவனுடைய உள்ளம் குழம்பிய கடலுக்கு ஒப்பானது - மகாகவி பாரதியார்.

பொதுஅறிவு

தமிழ்நாட்டிலே பரப்பளவில் மிகப்பெரிய மாவட்டம் எது?

திண்டுக்கல்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 குலசேகரப் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டிசம்பரில் தமிழகம் வருகிறார்.

💥 சூரியஒளி ஆற்றல் மூலம் 20 கோடி யூனிட் மின்சாரம் தயாரிப்பு என மின் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு.

💥 ஹாமூன் புயல் அதி தீவிரமாக மாறியது. வங்கதேசத்தில் இன்று கரையைக் கடக்கிறது.

💥 பாரா ஆசிய விளையாட்டில் இந்தியா 8 தங்கம் உட்பட 25 பதக்கங்கள் வென்று சாதனை.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது தென்ஆப்ரிக்கா.

TODAY'S HEADLINES

💥 Prime Minister Modi is coming to Tamil Nadu in December to lay the foundation stone for the rocket launch pad at Kulasekhara Pattinam.

💥 Power Producers Association announcement to produce 20 crore units of electricity through solar energy.

💥 Hamoon storm turned serious. Crosses the shores today in Bangladesh.

💥 India won a record 25 medals including 8 gold in the Para Asian Games.

💥 South Africa defeated Bangladesh in World Cup cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்