ஒன்பதாம் வகுப்பு - இயல் - 5 - வினா விடைகள்

 இயல் - ஐந்து - கல்வி

கற்பவை கற்றபின்

1)         பத்தியில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து  

           எழுதுக.

(அ)    பெண்ணடிமை போகவேண்டும்; பெண், கல்வி பெறவேண்டும். பெண்கள் படித்தால்தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.

               @ ஆல், தான், இல், ஆம், உம், அத்து, இன்.


(ஆ) நமது முன்சந்ததியார்களுக்கு இருந்ததைவிட, அதிகமான வசதிகள் நமக்கு உள்ளன. அவர்களின் காலம், அடவியில் ஆற்றோரத்தில், பர்ணசாலைக்குப் பக்கத்தில் ஆலமரத்தடியில் சிறுவர்கள் அமர்ந்திருக்க, குரு காலைக்கடன்களை முடித்துக் கொண்டு வந்து, பாடங்களைச் சொல்லித்தரும் முறை இருந்த காலம், ஏடும் எழுத்தாணியும் இருந்த காலம். இப்போதுள்ளது உலகை நமது வீட்டுக்கு அழைத்துவந்து காட்டக்கூடிய காலம்.  பாமர மக்கள் பாராளும் காலம் மனவளத்தை அதிகப்படுத்தும் வழிகள் முன்பு இருந்ததைவிட அதிகம் உள்ள காலம்.

               @ அது, கு, விட, கள், இன், இல், , உம், அ.

 

(2)  உம், , , தான், மட்டும், ஆவது, கூட, , ஆம் ஆகிய இடைச்சொற்களைப் பயன்படுத்திச்  சொற்றொடர்களை உருவாக்குக.

               @ உம் - மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை.

               @ ஓ - இன்றைக்கு மழை பெய்யுமோ?

               @ ஏ - நடந்தே வந்தேன்.

               @ தான் - நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள்.

               @ மட்டும் - படிப்பு மட்டும் இருந்தால் போதும்.

                @ ஆவது - ஐந்து பேராவது வாருங்கள்.

                @ கூட - தெருவில் ஒருவர்கூட நடமாடவில்லை.

                @ ஆ - புகழேந்தி உன்னுடன் பேசினானா?

               @ ஆம் - உள்ளே வரலாம்.

 

(3)      பொருத்தமான இடைச்சொற்களைப் பயன்படுத்துக.

 (அ)     மணற்கேணியைப் போல் விளங்கும் நூல்தான் உறுதுணையாக 

             இருக்கிறது.

 (ஆ)  பெண்களைப் படிக்க வைக்காத காலத்தில்கூட பெண் இனத்திற்குப் பெருமை சேர்க்கும்படியாக நம் முத்துலட்சுமி அம்மையார் முதல் பெண் மருத்துவராக வந்தார்கள்.

 (இ)      மக்களின் மனத்தில் உலக அறிவுபுக வழிசெய்ய வேண்டும்.

 

(4)      பொருத்தமாக இணைத்து எழுதுக.

 

         

அவன்

தான்

உம்

மனிதன்

இயற்கை

அழகு

 

@ அவன் தான் மனிதன்.                                  @  இயற்கைதான் அழகு.   

@ அவனும் மனிதன் தான்.                              @ இயற்கையும் அழகு தான்.

@ அவனே மனிதன்.                                           @ இயற்கையே அழகு.

@ அவனா மனிதன்?                                            @ இயற்கையா அழகு?

 

உனக்கு

மட்டும்

கூட

ஆவது

தெரியுமா?

தெரியும்

 

@ உனக்கு மட்டும் தெரியுமா?                       @ உனக்கு மட்டும் தெரியும்.

@ உனக்குக் கூட தெரியுமா?                          @ உனக்குக் கூட தெரியும்.

@ உனக்காவது தெரியுமா?                               @ உனக்காவது தெரியும்.

 

வீடு, நாடு

உம்

நமதே

காற்று, வெளிச்சம்

தேவை

அன்பு, அமைதி

வேண்டும்

கபிலர், பரணர்

வாருங்கள்

              

  @ வீடும் நாடும் நமதே.                                @ வீடோ நாடோ நமதே.

 @ காற்றும் வெளிச்சமும் தேவை.              @ காற்றோ வெளிச்சமோ தேவை.

  @ அன்பும் அமைதியும் வேண்டும்.          @ அன்போ அறிவோ வேண்டும்.

   @ கபிலரும் பரணரும் வாருங்கள்.          @ கபிலரோ பரணரோ வாருங்கள்.

 

(5)      பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.

               அ)        மாபெரும் பொதுக் கூட்டம் (கடி, மா)

               ஆ)       கடி விடுதும் (உறு, கடி)

               இ)        தவ நுதல் (வாள், தவ)

                ஈ)         சாலச் சிறந்தது (சால, மழ)

               உ)        கடி மனை (கடி, தட)

சிந்தனை  வினா

(1)    தான்’ என்னும் இடைச்சொல்லை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்?

               t ‘தான்’ என்னும் இடைச்சொல் அழுத்தப்பொருளில்தான் வருகின்றது.

               t எந்தச் சொல்லில் வருகிறதோ அதனையே முதன்மைப்படுத்துகிறது.

               t ஒரு சொற்றொடரில் ஒருமுறை மட்டுமே வருகிறது.

               t சான்று நிர்மலாதான் நேற்று விழாவில் பாடினாள்.

 

(2)      அவர்களுக்குப் பரிசு தருவேன் - இத்தொடரில் ‘ஆ’ என்னும் இடைச்சொல்லைச் சேர்த்து வினாக்களை அமைக்க.

               t அவர்களுக்கா பரிசு தருவேன்?

               t அவர்களுக்குப் பரிசா தருவேன்?

               t அவர்களுக்குப் பரிசு தருவேனா?

 

(3) செய்யுளில் உரிச்சொற்கள் எத்தகைய பொருள்களில் இடம்பெறுகின்றன?

t உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள்         உணர்த்துகின்றன.

               t இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.

                t சான்று மாநகர்.

 

(4)      தற்காலத் தமிழ்ப் பயன்பாட்டில் காணப்படுகின்ற உரிச்சொற்களை எழுதுக.

               t  மழ, குழ என்பவற்றிலிருந்து உருவானவை மழலை, குழந்தை போன்ற சொற்கள்.

               t செழுமை என்பது செழிப்பு, செழித்த, செழிக்கும் எனப் பெயராகவும் வினையாகவும்      பயன்படுகிறது.

t விழுமம் என்பது வழுப்பம், விழுமுதல், விழுமிய எனப்  பெயராகவும் வினையாகவும்     பயன்படுகிறது.

 

(5)      ‘ஆ’ என்னும் இடைச்சொல் எதிர்மறைப் பொருளில் எப்படி வரும் என்பதை எழுதுக.

               t புகழேந்தி நேற்று உன்னுடன் பேசவில்லையா? - எதிர்மறை வினாப்பொருள்.

 

(6)      இடைச் சொற்களைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் சொற்றொடர்களை மாற்றியமைத்துக் காண்க.

  (அ) வீட்டுக்குச் செல்லத்தான் இவ்வளவு பீடிகையா?

                @ விட்டுக்குச் செல்லவே இவ்வளவு பீடிகை.

             (ஆ) இந்தச் சூழ்நிலை மாறியாக வேண்டும்.

                @ இந்தச் சூழ்நிலையை மாற்றத்தான் வேண்டும்.

             (இ) வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.

               @ வானூர்தியைச் செலுத்துதல் மட்டுமன்றி உலகையும் கடலையும் அளத்தல்      போன்ற எந்தச் செயலுமே ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவைதான்.

            (ஈ) சமைப்பது தாழ்வென எண்ணலாமா?

               @ சமைப்பதைத் தாழ்வென எண்ணக்கூடாது.

            (உ) பூக்காமலே சில மரங்களில் காய்ப்பதுண்டு.

               @ பூக்காமலே சில மரங்கள் காய்க்குமா?

            (ஊ) வாளால் வெட்டினான்.

               @ வாளால் வெட்டினானா?

மதிப்பீடு

பலவுள் தெரிக.

1.     பொருத்தமான விடையைத் தேர்க.

         (அ) சிறுபஞ்சமூலம்                     -            1. காப்பிய இலக்கியம்

         (ஆ) குடும்ப விளக்கு                   -            2. சங்க இலக்கியம்

         (இ) சீவகசிந்தாமணி                    -            3. அற இலக்கியம்

         (ஈ) குறுந்தொகை                         -            4. தற்கால இலக்கியம்

         (க) அ-3, ஆ-4, இ-1, ஈ-2                     (உ) அ-2, ஆ-3, இ-1, ஈ-4 

         (ங) அ-3, ஆ-1, இ-4, ஈ-2                      (ச) அ-4, ஆ-1, இ-2, ஈ-3

2.    மாறுபட்ட குழுவினைக் கண்டறிக.

   (அ) கலைக்கூடம்          (ஆ) கடி             (இ) வினவினான்    (ஈ) இன்

      திரையரங்கம்                   உறு               செப்பினான்           கூட

      ஆடுகளம்                              கூர்               உரைத்தான்           கிறு

     அருங்காட்சியகம்               கழி               பகன்றான்              அம்பு

3.    கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?

         (அ) சிறுபஞ்சமூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில்  அமைந்துள்ளன.

         (ஆ) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?

       (இ) என்னன்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை!

         (ஈ) வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத்  தருக.

4.    சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

       (அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.

       (ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.

       (இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.

         1. , இ சரி; அ தவறு   2. , இ சரி; ஆ தவறு  3. மூன்றும் சரி  4. மூன்றும் தவறு.

5.    பூவாது காய்க்கும், மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

         (அ) பெயரெச்சம், வமைத்தொகை  (ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்

         (இ) வினையெச்சம், உவமை                ( ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

குறுவினா

 

1.     தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

         t பெண்கல்வி   t ஆண், பெண் சமத்துவம்.

 

2.    மூவாது மூத்தவர், நூல் வல்லார் - இத்தொடர் உணர்த்தும் பொருளைக் குறிப்பிடுக.

t நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார்.

 

3.    நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?

         t திருக்குறள் t பாரதிதாசன் கவிதைகள் t கால் முளைத்த கதைகள் t குடும்ப விளக்கு

 

4.    சாரதா சட்டம் எதற்காகப் இயற்றப்பட்டது?

         t குழந்தைத் திருமணத்தைத் தடுக்க 1929ஆம் ஆண்டு சாரதா சட்டம் இயற்றப்பட்டது.

 

சிறுவினா

1.     சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

         t ஔவையார்         t ஒக்கூர் மாசாத்தியார்                 t ஆதிமந்தியார்

         t வெண்ணிக் குயத்தியார்        tபொன்முடியார்              t காவற்பெண்டு

         t அள்ளுர் நன்முல்லையார்t நக்கண்ணையார்    t காக்கைப்பாடினியார்

         t வெள்ளிவீதியார்                         t நப்பசலையார்

 

2.    சமைப்பது தாழ்வா? இன்பம் 

       சமைக்கின்றார் சமையல் செய்வார்.

       (அ) இன்பம் சமைப்பவர் யார்?            

         t உணவை சமைப்பவர்.

       (ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா?

         t தாழ்வில்லை.

 

3.    விதைக்காமலே முளைக்கும் விதைகள் - இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம்       தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.

      பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. இதைப் போலவே நன்மை, தீமைகளை நன்குணர்ந்தவர், வயதில் இளையவராக இருந்தாலும், அவர் மூத்தவரோடு வைத்து எண்ணத் தக்கவரே ஆவார். பாத்தி அமைத்து விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே மேதையரும் பிறர் உணர்த்தாமல் எதையும் தாமே உணர்ந்து கொள்வர்.

 

4.    இன்றைய பெண்கல்வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.

               படிக்க வேண்டும் பெண்ணே - அப்பத்தான்

               பார்முழுதும் போற்றிடும் கண்ணே

               சுயமாகச் சிந்திக்கத் துணையாகும் கல்வி

               சொந்தக்காலில் நின்றிடவே உடனுதவும் கல்வி

               பெண்கள் படிக்கணும் நாட்டின் கண்கள் திறக்கணும்

               இன்னும் படிக்கணும் உயர்வு என்றும் விளையணும்

               ஆணும் பெண்ணும் சரிநிகரென்னும் அறிவு வளரணும்

               அன்பினாலே அகிலம் பூக்கும் உண்மை புரியணும்

5.    மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

 t தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.

 t இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்.

 t சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்.

  t சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.

t தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை  நிறைவேற காரணமாக இருந்தவர்.

t அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை  ஆகியவற்றை நிறுவியவர்.

6.    நீலாம்பிகை அம்மையாரின் தமிழ்ப் பணி குறித்த சிறப்பம்சங்களை எழுதுக.

t இவர் தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர்.

t தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் தமிழ் அகரவரிகை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

t இவரது நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளதாக            அமையும்.

 

நெடுவினா

1.     நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

       தில்லையாடி வள்ளியம்மை

      ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராகப் போராடியோர் பலர். அப்போராட்டத்தில் ஆண்களுக்கு நிகராகப் போரடியவர் தில்லையாடி வள்ளியம்மை ஆவார். தென்னாப்ரிக்காவில் காந்தியடிகள் இந்தியருக்கு எதிரான திருமணச் சட்டத்தை எதிர்த்துப் போராடினார். அப்போராட்டத்திற்கு ஆதராக வள்ளியம்மையும் போராடினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டு மூன்று மாத சிறைத்தண்டனைக்கு ஆளானார். சிறைச்சாலையில் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு நோயுடன் விடுதலை செய்யப்பட்டார். நோயுடன் போராடிய அவர் இறுதியில் அவர் தமது பதினாறாம் அகவையில் மரணமடைந்தார். திருமணமாகாத இளம்பெண்ணான வள்ளியம்மையின் வாழ்வு இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

       மிதாலி ராஜ்

      தமிழ் மரபைச் சார்ந்த மிதாலிராஜ் 1982ஆம் ஆண்டு இராஜஸ்தானில் பிறந்தார். சிறு வயதிலே மட்டைப் பந்தில் ஆர்வம் கொண்ட இவர் தமது பதினேழாவது வயதிலே இந்திய அணியில் இடம் பிடித்தார். சிறப்பாக செயல்பட்ட மிதாலிராஜ் அணியின் தலைமை பொறுப்பை ஏற்றார். 2017ஆம் ஆண்டு மகளிருக்கான உலகக்கோப்பை போட்டியில் இறுதிவரை அணியை வழிநடத்தினார். பெண்கள் ஒருநாள் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் இவர் ஆவார். இவருக்கு இந்திய அராசானது பத்மஸ்ரீ மற்றும் அர்ஜீனா விருது வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது.

       வளர்மதி

      அரியலூரில் பிறந்த இவர், 2015இல் தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர். இஸ்ரோவில் 1984ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 2012இல் உள் நாட்டிலேயே உருவான முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றினார். இவர், இஸ்ரோவின் செயற்கைக்கோள் திட்ட இயக்குநராகப் பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர் ஆவார்.

2.    குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான  கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

       தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்வி கருத்துகள்

      கையிலுள்ள செல்வத்தைக்காட்டிலும் நிலைத்த புகழுடைய கல்விதான் ஒருவருக்கு வாழ்வின் இறுதிவரையிலும் கைகொடுக்கிறது. கல்வி பெறுதலே பெண்களுக்கு அழகாகும் என்பதை பாவேந்தர் குடும்பவிளக்கு எனும் நூலில் எடுத்துரைக்கிறார்.

      கல்வியறிவு இல்லாத பெண்கள் களர்நிலம் போன்றவர்கள். அதில் புல் மட்டுமே விளையும். நல்ல பயிர் விளையாது. கல்வி கற்ற பெண்கள் பண்பட்ட நிலத்தைப் போன்றவர்கள். அவர்கள் மூலம் அறிவுடைய மக்கள் உருவாகின்றனர்.

      வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை. மின்னல்போல் ஒளிரும் இயல்புடையவள் பெண். ஆனால் கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள்.

      சமைப்பது, வீட்டு வேலைகளைச் சலிப்பில்லாமல் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது. ஆண்களும் இவ்வேலைகளைச் செய்யும் நன்னாள் வரவேண்டும். சமைக்கும் பணி பெண்களுக்குத் தவிர்க்க முடியாத கடமை எனவும் அப்பணி நல்ல தாய்மார்களுக்கே உரியது என்ற வழக்கத்தினை கண் இமைக்கும் நேரத்தில் நீக்க பெண்களுக்கு கல்வி வேண்டும்.

        இன்றைய சூழலில் பெண்கல்வி

      பாரதிதாசன் கண்ட பெண்கல்விக்கான கனவு நிறைவேறியுள்ளது. இன்று கல்வியறிவு பெறாத பெண்களே இல்லை என்ற நிலை அடைந்துள்ளோம். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் கல்வியறிவு உடைய  மக்கள் தோன்றுகின்றனர். பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பணியாற்றி வருகின்றனர். வானூர்தி செலுத்துதல், விண்ணை ஆய்வு செய்தல் முதலியன பல்வேறு துறைகளில் பெண்கள் சாதனையாற்றி வருகின்றனர். சமைத்தலில் பெண்களுக்கு ஆண்களும் துணையாக இருக்கின்றனர். சமைப்பது பெண்களுக்கான பணி என்ற கருத்து மாறி வருகிறது. குடும்பத்தில் இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டு வேலைகளை ஆண்களும் செய்கின்றனர். பெண்கள் கல்வியில் மட்டுமல்லாது அவர்களுக்கான எல்லா உரிமைகளிலும் தன்னிறைவு அடைந்துவருகின்றனர்.   

 

3. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில்       வெளிப்படுகின்ற கருத்துகள்  யாவை?

       நூலகம்

      வீட்டிற்கோர் புத்தகசாலை என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்யும். ஒரு நாட்டை உலகம் மதிப்பது அந்நாட்டு மக்களின் மனவளத்தைக் கண்டே. வீட்டிற்கோர் புத்தகசாலை ஏற்படுத்தினால் நமது நாட்டிலே நிச்சயமாக மனவளத்தைப் பெறமுடியும். வீடுகளில் மேஜை, நாற்காலி, சோபாக்கள், பீரோக்கள் இருக்கும். உடைகள் சிறு கடை அளவுக்கு இருக்கும். ஆனால் புத்தகசாலை இருக்காது. வீட்டிற்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும். மக்களின் மனத்திலே உலக அறிவு புக வழிசெய்ய வேண்டும்.

       நூல்கள்

      மனிதன் தங்கள் நாட்டையும் உலகையும் அறிய ஏடுகள் வேண்டும். வீடுகளிலே நடைபெறும் விசேஷசங்களின் போது, வெளியூர்கள் சென்று திரும்பும்போது, பரிசளிப்புகள் நடத்தும்போது புத்தகங்கள் வாங்குவது என்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.

      பூகோள, சரித ஏடுகள் இருக்க வேண்டும். நமக்கான ஒழுக்கத்தினையும் வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர் திருக்குறள் கட்டாயமான இருக்க வேண்டும். சங்க இலக்கியச் சாரத்தை அறிந்து கொள்வதற்கான ஏடுகள் இருக்கவேண்டும். மக்களின் முன்னேற்றத்திற்கு உதவும் விஞ்ஞான கண்டுபிடிப்பு நூல்கள் இருக்கவேண்டும். நாட்டு விடுதலைக்கான உழைத்தவர்கள், மக்களின் மனமாசு துடைத்தவர்கள், தொலைதேசங்களைக் கண்டவர்கள், வீரர்கள், விவேகிகள் ஆகியோரின் வாழ்க்கைக் குறிப்பு ஏடுகள் இருக்கவேண்டும்.

      இந்த அடிப்படையில் வீட்டிற்கோர் புத்தகசாலை அமைத்துக்கொண்டால் நாட்டுக்கு நல்லநிலை ஏற்படும்.

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க

Akbar said, "How many crows are there in this city?"

Without even a moment's thought, Birbal replied "There are fifty thousand five hundred and eighty-nine crows, my lord".

"How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere".

Akbar was pleased very much by Birbal's wit.

இந்த நகரில் எத்தனை காகங்கள் உள்ளன? என்று அக்பர், பீர்பாலிடம் கேட்டார்.

ஒரு நொடி கூட யோசிக்காமல் ”அரசே, ஐம்பதாயிரத்து ஐநூற்று எண்பத்தொன்பது காகங்கள் உள்ளன.” என்று பீர்பால் சொன்னார்.

”எப்படி இவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” என்று அக்பர் கேட்டார்.

அதற்குப் பீர்பால், ”வேண்டுமானால் ஆட்களைக் கொண்டு எண்ணிக்கொள்ளுங்கள். இதைவிடச் சற்று அதிகாமாகக் காக்கைகள் இருக்குமானால் அவை தங்கள் உறவினர்களைக் காண வந்த காக்கைகளாக இருக்கும். இதைவிடக் குறைவான காக்கைகள் இருக்குமானால் சில காகங்கள் தங்கள் உறவினர்களைக் காணச் சென்றிருக்கும்” என பதிலளித்தார்.

பீர்பாலின் புத்திசாலித்தனத்தைக் கண்டு அக்பர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

பிழை நீக்கி எழுதுக.

1. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.

@ மதீனா சிறந்த இசை வல்லுநராக வேண்டும்.

2. நல்ல தமிழுக்கு எழுதுவோம்.

@ நல்ல தமிழில் எழுதுவொம்.

3. பவளவிழிதான் பரிசு உரியவள்.

@ பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்.

4. துன்பத்தால் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.

@ துன்பத்தைப் பொறுத்துக்கொள்பவனே வெற்றி பெறுவான்.

5. குழலியும் பாடத் தெரியும்.

@ குழலிக்கும் பாடத் தெரியும்.

இடைச் சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

(எ.கா.) பெரும் மழை பெய்தது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

@ பெரும் மழை பெய்ததால் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

1. அலுவலர் வந்தார்; அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

@ அலுவலர் வந்ததால் அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

2. சுடர்க்கொடி பாடினாள்; மாலன் பாடினான்.

@ சுடர்க்கொடியும் மாலுனும் பாடினர்.

3. பழனிமலை பெரியது; இமயமலை மிகப் பெரியது.

@ பழனிமலையை விட இமயமலை பெரியது.

4. கவலையற்ற எதிர்காலம்; கல்வியே நிகழ்காலம்.

@ கவலையற்ற எதிர்காலத்திற்கு கல்வியே நிகழ்காலம்.

 விளம்பரத்தைச் செய்தித்தாள் செய்தியாக மாற்றி அமைக்க.


புத்தகம் படிப்போம்!                        புதியன அறிவோம்!

புத்தகத் திருவிழா

நாள் - செப்டம்பர் 19 முதல் 28 வரை

இடம் - சரசுவதி மகால் நூலகம், தஞ்சா வூர்.

நேரம் - காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை.

(முதல்நாள் காலை 9 மணிக்குத் தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார்.)

(நாள்தோறும் மாலை 6 மணிக்குப் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்களின் உரையும் இடம்பெறும்.)

அனைவரும் வாரீர்! அறிவுத்திறம் பெறுவீர்!

தஞ்சாவூரில் புத்தகத் திருவிழா!

         தஞ்சாவூர், சரசுவதி மகால் நூலகத்தில் செப்டம்பர் 19 முதல் 28 வரை பத்து நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற உள்ளது. செப்டம்பர் 19 அன்று காலை 9.00 மணிக்கு தமிழகக் கல்வி அமைச்சர் தொடங்கி வைக்கிறார். நாள்தோறும் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கண்காட்சி நடைபெறும். மாலை 6.00 மணிக்கு மேல் புதிய புத்தகங்கள் வெளியீடும் சிறப்புப் பேச்சாளர்கள் உரைகளும் இடம்பெறுகின்றன.

 நிகழ்வினைப் படித்து, வினாக்களுக்கு விடையளிக்க.

அண்ணாவின் வாழ்க்கையில்...

         தமிழக முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற காலகட்டத்தில், அரிசி வெளி மாநிலங்களுக்குச் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது. ஒரு நாள் அண்ணா விருத்தாசலம் கூட்டத்தை முடித்துவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் சோதனைச் சாவடியில் அவரது வண்டி நிறுத்தப்பட்டது. அங்கிருந்த வருவாய் அலுவலர், முதலமைச்சரின் மகிழுந்து என்று அறியாமலே சோதனை செய்தார். மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்துமடல்கள் இருந்தன. அவற்றைப் பார்த்த பிறகுதான் அந்த அலுவலருக்கு வந்திருப்பது யார் என்பது புரிந்தது. உடனே அவர் அண்ணாவின் அருகில் சென்று, "தெரியாமல் நடந்துவிட்டது பொறுத்துக் கொள்ளுங்கள்" என்றார். ஆனால், அண்ணா அவர் உதவியாளரிடம், "இந்த அலுவலரின் பெயரைக் குறித்துக்கொள்ளுங்கள்" என்றார். அந்த அலுவலர் தனக்கு ஏதோ நடந்து விடப்போகிறது என அச்சப்பட்டு அழாத குறையாகக் கெஞ்சினார். உடனே, அண்ணா, “நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வரவேண்டும் . அதற்காகத்தான் உங்கள் பெயரைக் கேட்டேன்” என்றார்.

1. மகிழுந்தில் வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் எப்படி அறிந்தார்?

         மகிழுந்தின் பின்பக்கம் முழுவதும் மாலைகள், கைத்தறி ஆடைகள், வாழ்த்து மடல்கள் இருந்ததைப் பார்த்த பிறகு வந்திருப்பது அண்ணா என்பதை வருவாய் அலுவலர் அறிந்தார்.

2. அண்ணாவிடம் ஏன் வருவாய் அலுவலர் பொறுத்துக்கொள்ளச் சொன்னார்?

         முதல்வரின் மகிழுந்தைச் சோதனைச் சாவடியில் நிறுத்திச் சோதனை செய்த தற்காக அண்ணாவிடம் வருவாய் அலுவலர் பொறுத்துக்கொள்ளச் சொன்னார்.

3. அண்ணா, வருவாய் அலுவலரின் செயலை எவ்வாறு பாரா ட்டினார்?

         நாங்கள் போடும் சட்டங்களைச் சரியான முறையில் நிறைவேற்றும் பொறுப்பு உங்களைப்போன்ற அலுவலரின் கையில்தான் இருக்கிறது. இன்று நேரில் உங்கள் செயலைப் பார்த்தேன். உங்களைப் போன்றவர்கள்தாம் உயர்பதவிக்கு வரவேண்டும்” என்று பாராட்டினார்.

4. பத்தியில் இடம்பெறும் இடைச் சொற்களைக் கொண்டு இரு புதிய சொற் றொடர்களை

உருவாக்குக.

@ இன் - அண்ணாவின் பேச்சு அருவி போல மேடைகளில் கொட்டும்.

5. நிகழ்வுக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

@ நேர்மை

மொழியோடு விளையாடு

சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக

மாணவர்கள்                ஆசிரியர்                        பாடவேளை                 கரும்பலகை

புத்தகம்                            எழுதுகோல்                 அழிப்பான்                    வழிபாட்டுக் கூட்டம்

அறை                              கல்லூரி                          உயர்நிலை                   சீருடை

மடிக்கணினி

@ வழிபாட்டுக் கூட்டத்தில் மாணவர்கள் சீருடையுடன் நின்றனர்.

@ பாடவேளை முடிந்த தும் ஆசிரியர் கரும்பலகையை அழித்தார்.

@ மாணவர்கள் உயர்நிலை அடைய ஆசிரியர் வழிகாட்டினார்.

@ கல்லூரியில் புத்தக அறை உள்ளது.

@ கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது.

 அகராதியில் காண்க.

அரங்கு - இடம்.                        ஒட்பம் - அறிவு.

கான் - காடு.                               நசை - விருப்பம்.

படங்களை இணைத்தால் கிடைக்கும் நூல்களின் பெயர்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஒரு கிராமத்து நதி, கிழவனும் கடலும், கருப்பு மலர்கள் , சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம், தண்ணீர்தண்ணீர்)

1. நா. காமராசனின் கவிதை நூல் ...

@ கருப்பு மலர்கள்.

2. திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடகநூல்.

@ தண்ணீர் தண்ணீர்.

3. நோபல் பரிசு பெற்ற எர்னஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல்

@ கிழவனும் கடலும்

4. சாகித்திய அகாதெமி பரிசுபெற்ற சிற்பியின் கவிதை நூல்

@ ஒரு கிராமத்து நதி

5. எஸ். ராமகிருஷ்ணனின் சிறார் நாவல்.

@ சாக்ரட்டீஸின் சிவப்பு நூலகம்.

 காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.


படிப் படியாய் நாளும்படி

படித்துப் படித்து முன்னேறு

பட்டமும் பெற்றிடலாம்

பாரினையும் வென்றிடலாம்

 




கடிதம் எழுதுக.

உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்ச லில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

விடுநர்

               க.வளவன்,

               ஒன்பதாம் வகுப்பு,

               அரசு மேல்நிலைப் பள்ளி,

               மங்கலம்.

 

பெறுநர்

               பதிப்பகத்தார்,

               நெய்தல் பதிப்பகம்,

               சென்னை - 600 006.

 

மதிப்பிற்குரிய ஐயா,

               பொருள்: பள்ளி நூலகத்திற்குத் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் அகராதி அனுப்பக் கோருதல் - சார்பு.

வணக்கம், எங்கள் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி நூலகத்தில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. அந்நூலகத்திற்குத் தமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகள் தேவைப்படுகின்றன. நூலுக்கான தொகையை வங்கி வரைவோலையாக இத்துடன் இணைத்து அனுப்புகிறேன். நூல்களை பதிவஞ்சலில் அனுப்புமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

 

இடம் : மங்கலம்,                                                                      இப்படிக்கு,

நாள்   : 12.10.2023.                                                                   க.வளவன்.

 

உறைமேல் முகவரி 

               பெறுநர்,

             

                               பதிப்பகத்தார்,

                              நெய்தல் பதிப்பகம்,

                              சென்னை - 600 006.

 

நிற்க அதற்குத் தக

எனக்குப் பிடித்தவை / என் பொறுப்புகள்

1.         என்னை உயர்வாகப் பேசுவது எனக்குப் பிடிக்கும்.

            எவரையும் காயப்படுத்தாமல் நடந்துகொள்வது, குறைகூறாமல் பேசுவது என் பொறுப்பு.

2.        எனக்குப் படம் வரைவது பிடிக்கும்.

            பள்ளிச்சுவர், வீட்டுச்சுவர், பொதுச்சுவர் ஆகியவற்றில் வரையாமல் எழுதாமல்      ருப்பதோடு பிறரையும் அவ்வாறு செய்யவிடாமல் தடுப்பது என் பொறுப்பு.

3.        எனக்கு திறன்பேசி பிடிக்கும்.

            தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்தாமல் இருப்பது என் பொறுப்பு.

4.        எனக்கு அதிக மதிப்பெண் எடுப்பது பிடிக்கும்.

            அதனை நேர்வழியில் அடைவது என் பொறுப்பு.

5.        எனக்கு தொலைக்காட்சி பார்ப்பது பிடிக்கும்.

            நல்ல நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்து பார்ப்பது என் பொறுப்பு

 கலைச்சொல் அறிவோம்

சமூக சீர்திருத்தவாதி – Social Reformer               தன்னார்வலர் – Volunteer

களர்நிலம் – Saline Soil                                           சொற்றொடர் - Sentence

PDF link Download Here

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்