பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 03.11.2023, வெள்ளி

 03.11.2023, வெள்ளி

திருக்குறள்

உறுவது  சீர்தூக்கும்  நட்பும்  பெறுவது

கொள்வாரும்  கள்வரும்  நேர்.

பொருள்

தமக்கு வரும் பயன் ஒன்றையே எதிர்பார்க்கும் நண்பரும் களவு செய்யும் கள்வரும் தம்முள் ஒப்பாவார்கள்.

பழமொழி

As empty stomach has no ears.

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

பொன்மொழி

மகிழ்ச்சி என்பது வேண்டும் என்ற தேடலில் கிடைப்பது இல்லை. அது போதும் என்ற மன நிறைவில் கிடைக்கிறது.

பொதுஅறிவு

இந்தியாவின் வன மனிதர் என்று அழைக்கப்படுபவர் யார்?

ஜாதவ் பயேங்க்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 சுதந்திரப் போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் திருவுருவச்சிலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

💥 பருவ மழையை எதிர்கொள்ள தமிழகத்தில் 4967 முகாம்கள் தயார்நிலையில் உள்ளன.

💥 வளிமண்டல் சுழற்சி காரணமாக இன்று முதல் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும். வானிலை அறிவிப்பு மையம் தகவல்.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வென்றது இந்திய அணி.

TODAY'S HEADLINES

💥 Chief Minister M. K. Stalin inaugurated the statue of freedom fighter Anjalayammal.

💥 4967 camps are ready in Tamil Nadu to face monsoon.

💥 Due to atmospheric circulation, it will rain heavily for 6 days from today. Weather forecast center information.

💥 Indian team beat Sri Lanka in World Cup cricket match.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்