பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 08.11.2023, புதன்

 08.11.2023, புதன்

திருக்குறள்

அருளொடும்  அன்பொடும்  வாராப்  பொருளாக்கம்

புல்லார்  புரள  விடல்.

பொருள்

அருளும் அன்பும் பொருந்தாமல் பிறவழியில் வரும் செல்வத்தினைப் பற்றாமல் நீக்குதல் வேண்டும்.

பழமொழி

THE MILLS OF GOD GRIND SLOW BUT SURE

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்.

பொன்மொழி

அழகைப் பற்றி கனவு காணாதீர்கள். அது உங்கள் கடமையைப் பாழாக்கி விடும். கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள். அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும். - அப்துல்கலாம்.

பொதுஅறிவு

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 சூரியனில் இருந்து வெளிவரும் எக்ஸ் கதிர்களை படமெடுத்து அனுப்பியது ஆதித்யா எல் 1 விண்கலம்.

💥 68 அடியை எட்டியது வைகை அணை. 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.

💥 பாரத் ஆட்டா என்ற பெயரில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூபாய் 27 அரைக்கு மத்திய அரசு விற்பனை.

💥 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

TODAY'S HEADLINES

💥 The Aditya L1 spacecraft captured X-rays from the Sun.

💥 Vaigai Dam reached 68 feet. Flood warning for 5 districts.

💥 The central government is selling wheat flour under the name of Bharat Ata at Rs 27 and a half per kg.

💥 Austraila defeated Afghanistan in World Cup cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்