பள்ளி - காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 09.11.2023, வியாழன்
09.11.2023, வியாழன்
திருக்குறள்
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
பொருள்
அன்பு என்னும் தாய் பெற்ற அருள் என்னும் குழந்தை, பொருள் என்னும் வளர்ப்புத் தாயால் பேணப்படும்.
பழமொழி
TAKE TIME BY THE FORELOCK
காலத்தே கடமையைச் செய்.
பொன்மொழி
ஈரம் இருக்கும் வரை இலைகள் உதிர்வதில்லை.
நம்பிக்கை இருக்கும் வரை நாம் தோற்பதில்லை.
பொதுஅறிவு
டெல்லியின் பழமையான பெயர் என்ன?ஷ
இந்திரப் பிரஸ்தம்.
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 விடுபட்ட 11.85 லட்சம் பேரில் தகுதியானவர்களுக்கு நவம்பர் 10 முதல் உரிமைத்தொகை வழங்கப்படும்.
💥 தீபாவளி பண்டிகையை ஒட்டி தென்னிந்தியாவிற்கு 60 சிறப்பு ரயில்களை இயக்குகிறது தென்னக ரயில்வே.
💥 புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு.
💥 ஐ சி சி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் ஷிப்மன் கில் பேட்டிங்கிலும், சிராஜ் பவுலிங்கிலும் முதலிடம்.
💥 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து.
TODAY'S HEADLINES
💥 Out of the missing 11.85 lakh's people, Eligible people will be given entitlement from November 10.
💥 Southern Railway is running 60 special trains to South India on the occasion of Diwali.
💥 A new low pressure area has formed. Heavy rain likely for two days in Tamil Nadu.
💥 ICC oneday cricket ranking. shubman Gill tops batting, Siraj tops bowling.
💥 England beat
Netherlands in Cricket World Cup.
கருத்துகள்
கருத்துரையிடுக