பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 15.11.2023, புதன்
15.11.2023, புதன்
திருக்குறள்
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை
பொருள்
முதல் இல்லாத வணிகருக்கு வியாபாரத்தில் இலாபம் இல்லை. தாங்குகின்ற துணையான பெரியோர் இல்லாதவர்க்கு நிலைத்த வாழ்வில்லை.
பழமொழி
No smoke without fire.
நெருப்பில்லாமல் புகையாது.
பொன்மொழி
உண்மை பேசுவாயாக. சினத்தைத் தவிர்ப்பாயாக. உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கின்றவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவன் நற்கதி அடைவார். - கவுதம புத்தர்.
பொதுஅறிவு
இந்தியாவில் முதன்முதலில் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் மாவட்டம் எது?
விதிஷா
இன்றைய முக்கியச் செய்திகள்
* தமிழகத்தில் பருவமழை பாதிப்பை எதிர்கொள்ள 4,967 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.
* உலகின் முதல் 10 மாசுபட்ட நகரங்களில் டெல்லி, கொல்கத்தா, மும்பை நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
* தமிழகத்திற்கு இன்று ஆரஞ்ச் அலர்ட். டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
* உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இன்று இந்தியா - நியூலாந்து மோதுகின்றன.
TODAY'S HEADLINES
* 4,967 relief camps are ready to deal with the effects of monsoon in Tamil Nadu.
* Delhi, Kolkata and Mumbai are among the top 10 most polluted cities in the world.
* Orange alert for Tamil Nadu today. Chance of heavy rain in delta districts.
* India vs New Zealand today in the Cricket World Cup
semi-final.
கருத்துகள்
கருத்துரையிடுக