பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 16.11.2023, வியாழன்
16.11.2023, வியாழன்
திருக்குறள்
யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
பொருள்
ஒருவன், எந்தெந்தப் பொருள்களிடமிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ அந்தந்தப் பொருள்களால் வரும் துன்பத்தை அவன் அடைவதில்லை.
பழமொழி
MANNERS MAKE THE MAN
ஒழுக்கம் உயர்வு தரும்.
பொன்மொழி
என்ன நடந்து விடுமோ? என்று யோசிப்பதை இருப்பதைவிட, மோதிப் பாருங்கள். எழுந்தால் வெற்றி. விழுந்தால் அனுபவம்.
பொதுஅறிவு
உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை எவ்வளவு?
34
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 விவசாயிகளுக்கு 15 வது தவணையாக ரூபாய் 18 ஆயிரம் கோடியை விடுவித்தார் பிரதமர் மோடி.
💥 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி இன்று வெளியாகிறது.
💥 பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூபாய் 24,000 கோடி திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
💥 புயல்சின்னம் மேலும் வலுவடைந்தது. தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.
💥 உலகக்கோப்பைக் கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இந்தியா நியூசிலாந்தை வென்று இறுதிப்போட்டிக்கு செல்கிறது.
TODAY'S HEADLINES
💥 Prime Minister Modi released 18 thousand crore rupees as 15th installment to farmers.
💥 Date for 10th, 11th, 12th class public examination will be released today.
💥 Prime Minister Modi launched Rs 24,000 crore scheme for tribal development.
💥 The storm symbol got stronger. Chance of heavy rain in southern districts.
💥 India beats New Zealand in Cricket World Cup
semi-final to reach final
கருத்துகள்
கருத்துரையிடுக