பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 17.11.2023, வெள்ளி
17.11.2023, வெள்ளி
திருக்குறள்
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
பொருள்
பொருள் இல்லாதவரை எல்லோரும் இகழ்ந்து பேசுவர். பொருளுடையவரை எல்லாரும் போற்றுவர்.
பழமொழி
The mills of God grind slow but sure
அரசன் அன்றே கொல்லும் தெய்வம் நின்று கொல்லும்
பொன்மொழி
மிகப்பெரிய சாதனைகள் சாதிக்கப்படுவது வலிமையினால் அல்ல. விடா முயற்சியினால்தான். - தாமஸ் ஆல்வா எடிசன்.
பொதுஅறிவு
சர்வதேச சகிப்புத்தன்மை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?
நவம்பர் 16
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 நாளை தமிழக சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறுகிறது.
💥 10, 11, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 1 இல் தொடங்கி ஏப்ரல் 8 இல் முடிகிறது.
💥 சென்னை ஐ.ஐ.டி. யில் பி.எச்.டி படிப்பு அறிமுகம்.
💥 வங்கக் கடலில் இன்று உருவாகிறது மிதிலி புயல். தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மழை பெய்யும்.
💥 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்ரிக்காவை வென்று 8 முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது ஆஸ்திரேலியா.
TODAY'S HEADLINES
💥 A special session of the Tamil Nadu Legislative Assembly will be held tomorrow.
💥 The date of general examination for class 10, 11, 12 students has been announced. Starts March 1 and ends April 8.
💥 Chennai I.I.T. Introduction to Ph.D.
💥 Cyclone Mithili is forming in the Bay of Bengal today. It will rain for six days in Tamil Nadu.
💥 Australia qualified for the 8th World Cup final after
defeating South Africa.
கருத்துகள்
கருத்துரையிடுக