பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 21.11.2023, செவ்வாய்
21.11.2023, செவ்வாய்
திருக்குறள்
செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகதனிற் கூரிய தில்.
பொருள்
பொருளைத் தேடிச் சேர்த்தல் வேண்டும். அது பகைவரின் செருக்கை அறுக்கும் உறுதியான படைக்கலம். அதனைவிடக் கூர்மையான கருவி வேறொன்றுமில்லை.
பொன்மொழி
உன் கை ரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே. ஏனென்றால் கையே இல்லாதவனுக்குக் கூட எதிர்காலம் உண்டு. - அப்துல்கலாம்.
பழமொழி
LIVE AND LET LIVE
வாழு, வாழவிடு.
பொதுஅறிவு
தெற்குலகின் குரல் உச்சி மாநாடு எந்நாட்டின் தலைமையில் நடைபெற்றது?
இந்தியா
இன்றைய முக்கியச் செய்திகள்
💥 11, 12 மாணவர்களுக்கு டிசம்பர் 7 முதல் அரையாண்டுத் தேர்வு தொடக்கம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
💥 9 மாவட்டங்களில் 4272 அடுக்குமாடி குடியிருப்புகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
💥 நெல்லை மாவட்டத்தில் கடும் மழை. தாமிரபரணியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
💥 குமரிக்கடல் பகுதியில் காற்றின் சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு பலத்த மழை பெய்யும்.
TODAY'S HEADLINES
💥 Department of School Education has announced that the half-yearly examination will start from December 7 for students of 11 and 12.
The chief minister inaugurated 4272 flats in nine district.
💥 Heavy rain in Nellie district. The flood is overflowing in Tamiraparani.
💥 Due to the circulation
of air in the Kumarikadal region, Tamil Nadu will receive heavy rains for the
next three days.
கருத்துகள்
கருத்துரையிடுக