பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 29.11.2023, புதன்

 29.11.2023, புதன்

திருக்குறள்

அகனமர்ந்து  ஈதலின்  நன்றே  முகனமர்ந்து

இன்சொலன்  ஆகப்  பெறின்

பொருள்

மனம் மகிழ்ந்து பொருளைக் கொடுப்பதைக் காட்டிலும் முகமலர்ச்சியுடன் இனிய சொற்களைப் பேசுவதே சிறந்ததாகும்.

பழமொழி

Truth alone triumphs

வாய்மையே வெல்லும்.

பொன்மொழி

தவறுகளை ஒப்புக்கொள்ளும் தைரியமும், அவற்றை விரைவில் திருத்திக் கொள்வதற்கான வலிமையும்தான் வெற்றி பெறுவதற்கான குணங்களாகும். - லெனின்

பொதுஅறிவு

தென்னிந்தாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் எது?

கோயம்புத்தூர்.

இன்றைய முக்கியச் செய்திகள்

💥 உத்திரகாண்ட்டில் மலைச் சுரங்கத்தில் 17 நாளாக சிக்கித்தவித்த 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

💥 எறையூர் சிப்காட் வளாகத்தில் காலணி உற்பத்தித் தொழிற்சாலையைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

💥 நிலவில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைக்க வேண்டும். அண்ணாதுரை பேட்டி.

💥 வங்கக் கடலில் உருவான புயல் இன்று தாழ்வு மண்டலமாக வலுவடையும்.

💥 மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட்போட்டியில் இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா.

TODAY'S HEADLINES

💥 41 workers trapped in a mountain mine in Uttarakhand for 17 days were rescued safely.

💥 Chief Minister M.K.Stalin inaugurated a shoe manufacturing factory in Erayur Chipkot complex.

💥 International Space Station should be set up on the moon. Interview with Annadurai.

💥 The storm formed in the Bay of Bengal will strengthen into a depression today.

💥 Australia defeated India in the third 20 over cricket match.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்