பள்ளி - காலை வணக்கக் கூட்ட செயல்பாடுகள் - 02.02.2024, வெள்ளி

 02.02.2024, வெள்ளி

திருக்குறள்

முதல்இலார்க்கு  ஊதியம்  இல்லை  மதலையாம்

சார்புஇலார்க்கு  இல்லை  நிலை

பொருள்

முதல் இல்லாத வணிகருக்கு வியாபாரத்தில் இலாபம் இல்லை. தாங்குகின்ற துணையான பெரியோர் இல்லாதவர்க்கு நிலைத்த வாழ்வில்லை.

பழமொழி

No smoke without fire.

நெருப்பில்லாமல் புகையாது.

பொன்மொழி

உண்மை பேசுவாயாக. சினத்தைத் தவிர்ப்பாயாக. உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கின்றவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவன் நற்கதி அடைவார். - கவுதம புத்தர்.

பொதுஅறிவு

இந்தியாவில் முதன்முதலில் 5G தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய முதல் மாவட்டம் எது?

விதிஷா

இன்றைய முக்கியச் செய்திகள்

* மத்திய பட்ஜெட் எளிய மக்கள் மற்றும் பெண்களுக்கானது என பிரதமர் மோடி புகழாரம்.

ஒரு கோடி வீடுகளில் சூரிய சக்தி தகடு மூலம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசம். 

* நெல்லை, பாளையங்கோட்டையில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

இவ்வாண்டு நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் கலைத்திருவிழா போட்டிகளில் 40 லட்சம் மாணவ மாணவியர்கள் பங்கேற்றுள்ளனர்.

* தமிழக சட்டசபை கூட்டம் வரும் 12 ஆம் தேதி தொடங்குகிறது. 19 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல்.

TODAY'S HEADLINES

* Prime Minister Modi praises that Union Budget is for common people and women.

* Up to 300 units of electricity will be provided free of cost in one crore households through solar panels.

* There was heavy rain with thunder in Nellai and Palayamgottai.

* 40 lakhs students have participated in the arts festival competitions of the Department of School Education held this year.

* The Tamil Nadu Assembly session will begin on the 12th. Budget presentation on 19th.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்