PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 5
1. ‘உள்ளங்கை நெல்லிக்கனி போல’ இதில் அமைந்துள்ள நயம்
(அ) இலக்கணை
(ஆ) உருவகம்
(இ) உவமை
(ஈ) இயைபு
2. முதல் தமிழ்க் கணினி யாருடைய பெயரில் அமைந்துள்ளது?
(அ) பாரதியார்
(ஆ) கம்பர்
(இ) தொல்காப்பியர்
(ஈ) திருவள்ளுவர்
3. தமிழுக்கு அணிகலனாக அமைந்திருப்பது
(அ) ஐம்பெருங்காப்பியங்கள்
(ஆ) ஐஞ்சிறுங்காப்பியங்கள்
(இ) பத்துப்பாட்டு
(ஈ) எட்டுத்தொகை
4. ஆழி என்னும் சொல்லின் பொருள்
(அ) கப்பல்
(ஆ) முத்து
(இ) கடல்
(ஈ) அலை
5. நிலவகைகளின் பெயர்களுக்கான காரணங்களில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.
(அ) தரிசு – பயிர் செய்வதற்கேற்ற நிலம்.
(ஆ) சிவல் – செந்நிறமான நிலம்.
(இ) சுவல் – மேடான நிலம்.
(ஈ) அவல் – பள்ளமான நிலம்.
6. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதன்முதலில் அச்சேறிய மொழி
(அ) தமிழ்
(ஆ) சமஸ்கிருதம்
(இ) தெலுங்கு
(ஈ) கன்னடம்
7. நற்கணக்கே என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
(அ) நல்+கணக்கே
(ஆ) நற்+கணக்கே
(இ) நன்மை+கணக்கே
(ஈ) ந+கணக்கே
8. பொருத்தமான இணையைத் தெரிவு செய்க.
(அ) பாவலரேறு – இளங்குமரனார்.
(ஆ) மொழிஞாயிறு – பாவாணர்.
(இ) பன்மொழிப்புலவர் – பெருஞ்சித்திரனார்.
(ஈ) சந்தக்கவிமணி – சச்சிதானந்தன்.
9. பொருந்தாத இணையைத் தெரிவு செய்க.
(அ) குறிஞ்சிப்பாட்டு – நா.பார்த்தசாரதி.
(ஆ) தமிழின்பம் – இரா.பி. சேதுப்பிள்ளை.
(இ) மழையும் புயலும் – வ.ராமசாமி.
(ஈ) பாவாணர் வரலாறு – இரா.இளங்குமரனார்.
10. இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கொண்டவர்கள்
(அ) திரு.வி.க , இளங்குமரனார்
(ஆ) பாவாணர், இளங்குமரனார்.
(இ) பெருஞ்சித்திரனார், சச்சிதானந்தன்
(ஈ) பாரதியார், பாரதிதாசன்.
விடைக்குறிப்பு
1 - இ
2 - ஈ
3 - அ
4 - இ
5 - அ
6 - அ
7 - இ
8 - இ
9 - அ
10 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக