PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 6

1. பத்துப்பாட்டில் குறைந்த அளவடிகளைக்  கொண்ட நூல் எது?

(அ) முல்லைப்பாட்டு

(ஆ) மலைபடுகடாம்

(இ) மதுரைக்காஞ்சி

(ஈ) குறிஞ்சிப்பாட்டு

2. பொருத்துக.

1. மூதூர் - (அ) உரிச்சொல் தொடர்

2. உறுதுயர் - (ஆ) மூன்றாம் வேற்றுமைத் தொகை

3. கைதொழுது - (இ) வினைத்தொகை

4. தடக்கை - (ஈ) பண்புத்தொகை

(அ) 1-ஈ, 2-ஆ, 3-இ, 4-அ

(ஆ) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ

(இ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

3. முல்லைத்திணைக்குரிய பெரும்பொழுது

(அ) சித்திரை, வைகாசி

(ஆ) ஆனி, ஆடி

(இ) ஆவணி, புரட்டாசி

(ஈ) ஐப்பசி, கார்த்திகை

4. புயலின் பெயர்களில் இந்தியா கொடுத்த ‘ஜல்’ என்பதின் பொருள்

(அ) குளிர்ச்சி

(ஆ) அலை

(இ) வேகம்

(ஈ) நான்கு பூதங்கள்

5. புலம்பெயர்ந்த தமிழர்கள் பற்றிய முதல் புதினம்

(அ) புயலிலே ஒரு தோணி

(ஆ) கடற்கூத்து

(இ) கோபல்லபுரத்து மக்கள்

(ஈ) கப்பித்தான்

6. திருவெம்பாவை, திருப்பாவை எந்நாட்டு மன்னரின் முடிசூட்டு விழாவில் பாடப்படுகிறது?

(அ) அரபு

(ஆ) தாய்லாந்து

(இ) கிரின்லாந்து

(ஈ) ஓமன்

7. இந்தியா, சுதேசமித்திரன் ஆகிய இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) பெருஞ்சித்திரனார்

(ஈ) தமிழழகனார்

8. ‘பல் பழப் பழவின் பயங்கெழு கொல்லி’ என்ற அகநானூறு அடியில் உள்ள கொல்லிமலை அமைந்துள்ள மாவட்டம்

(அ) சேலம்

(ஆ) திருச்சி

(இ) நாமக்கல்

(ஈ) திருப்பூர்

9. மலர்க்கை என்பதில் உவமானம்

(அ) கை

(ஆ) மலர்

(இ) மலர்க்கை

(ஈ) போன்ற

10. பொருத்துக.

1. Storm - (அ) நிலக்காற்று

2. Tempest - (ஆ) புயல்

3. Land Breeze - (இ) சூறாவளி

4. Tornado - (ஈ) பெருங்காற்று

(அ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4-அ

(ஆ) 1- ஆ, 2-ஈ, 3-அ, 4-இ

(இ) 1- அ, 2-ஆ, 3-இ, 4-ஈ

(ஈ) 1- ஈ, 2-இ, 3-ஈ, 4-அ

விடைக்குறிப்பு

1 - அ

2 - ஈ

3 - இ

4 - ஈ

5 - அ

6 - ஆ

7 - ஆ

8 - இ

9 - ஆ

10 - ஆ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்