PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 14

01. “நதியில் விளையாடி கொடியில் தலைசீவி நடந்த இளந்தென்றலே” எனப் பாடியவர்

(அ) பாரதியார்

(ஆ) கண்ணதாசன்

(இ) இளங்கோவடிகள்

(ஈ) கம்பர்

02. ‘கப்பித்தான்’ பொருள் தருக.

(அ) மாலுமி

(ஆ) தலைமை மாலுமி

(இ) மீன் பிடிப்பவர்

(ஈ) கப்பலை சரி செய்பவர்

03. முல்லைப்பாட்டு .................. நூல்களுள் ஒன்று.

(அ) எட்டுத்தொகை

(ஆ) பத்துப்பாட்டு

(இ) நீதி

(ஈ) காப்பிய

04. பொருந்தாக இணையைத் தெரிவு செய்க.

(அ) முத்துப்பல் -உவமைத்தொகை

(ஆ) மலை வாழ்வார் – பண்புத்தொகை

(இ) கீரிபாம்பு – உம்மைத்தொகை

(ஈ) பூங்குழல் வந்தாள் – உவமைத்தொகை

05.  ‘Whirlwind’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.

(அ) கடல்காற்று

(ஆ) சுழல்காற்று

(இ) நிலக்காற்று

(ஈ) பெருங்காற்று

06. “அரும்பு அவிழ் அலரி தூஉய்” இவ்வடியிலுள்ள ‘தூஉய்’ என்னும் சொல்லின் இலக்கணக்குறிப்பு

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) சொல்லிசை அளபெடை

(இ) செய்யுளிசை அளபெடை

(ஈ) ஒற்றளபெடை

07. 'விருந்தே புதுமை' என்று கூறியவர்

(அ) இளங்கோவடிகள்

(ஆ) கம்பர்

(இ) திருவள்ளுவர்

(ஈ) தொல்காப்பியர்

08. கூற்று 1: திருவள்ளுவர் விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே அமைத்திருக்கிறார்.

கூற்று 2: இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார் திருவள்ளுவர்.

(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு.

(ஆ) கூற்று 1, 2 சரி.

(இ) கூற்று 1, 2 தவறு.

(ஈ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி.

09. மோப்பக் குழையும் அனிச்சம் என்னும் குறள் மூலம் வள்ளுவர் கூறும் கருத்து

(அ) தனித்து உண்ணாமை என்பது தமிழரின் பண்பு

(ஆ) விருந்தோம்பல் பெண்களின் சிறந்த பண்பு

(இ) முகம் வேறுபடாமல் முகம் மலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்

(ஈ) வறுமையிலும் விருந்தினரைப் பேண வேண்டும்

10. சிலப்பதிகாரத்தில் கண்ணகி எதற்காக பெரிதும் வருந்தியதாக இளங்கோவடிகள் கூறுகிறார்?

(அ) கோவலனை பிரிந்ததற்கு

(ஆ) விருந்தினரை போற்ற முடியாத நிலைக்கு

(இ) வணிகத்தில் ஏற்பட்ட இழப்புக்கு

(ஈ) தன்னுடைய செல்வம் அழிந்ததற்கு

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - ஆ

3 - ஆ

4 - ஆ

5 - ஆ

6 - இ

7 - ஈ

8 - ஆ

9 - இ

10 - ஆ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்