PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 18
01. பண்என்னாம் பாடற்கியைபின்றேல்; கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்
- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி
(அ) எடுத்துக்காட்டு உவமை அணி
(ஆ) உவமை அணி
(இ) தற்குறிப்பேற்ற அணி
(ஈ) தீவக அணி
02. மலைபடுகடாம் நூலில் உள்ள மொத்த அடிகளின் எண்ணிக்கை
(அ) 583
(ஆ) 103
(இ) 381
(ஈ) 756
03. ‘அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்’ என்று குறிப்பிடும் நூல்
(அ) குறுந்தொகை
(ஆ) புறநானூறு
(இ) கொன்றைவேந்தன்
(ஈ) நற்றிணை
04. ‘நறுந்தொகை’ என்று அழைக்கப்படும் நூல்
(அ) வெற்றி வேற்கை
(ஆ) காசிக்காண்டம்
(இ) விவேக சிந்தாமணி
(ஈ) நைடதம்
05. ‘கூத்தராற்றுப்படை’ என்று அழைக்கப்படும் நூல்
(அ) மலைபடுகடாம்
(ஆ) முல்லைப்பாட்டு
(இ) மதுரைக்காஞ்சி
(ஈ) காசிக்காண்டம்
06. ‘கறங்கு இசை விழவின் உறந்தை’ என்னும் அகநானூறு அடியில் வரும் உறையூர் அமைந்துள்ள மாவட்டம்
(அ) நாமக்கல்
(ஆ) திருச்சி
(இ) சேலம்
(ஈ) திருவாரூர்
07. ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) ஒழுக்கம் என்றால் என்ன?
(ஆ) ஒழுக்கமும் உயிரினும் ஒன்றா?
(இ) உயிரினும் ஓம்பப்படுவது எது?
(ஈ) ஒழுக்கம் என்பதன் பொருள் என்ன?
08. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்
நச்சு மரம்பழுத் தற்று
- இக்குறட்பாவில் வந்துள்ள உவம உருபு
(அ) அற்று
(ஆ) நச்சு
(இ) செல்வம்
(ஈ) மரம்
09. பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்
- இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள நயங்கள்
(அ) அடிஎதுகை, கூழைமோனை
(ஆ) அடி எதுகை, இணை மோனை
(இ) அடி எதுகை பொழிப்பு மோனை
(ஈ) அடி எதுகை ஒரூஉ மோனை
10. ‘செருக்கு’ என்பது வெண்பாவின் ஈற்றடியின் ஈற்றுச்சீர் எனில் அதன் வாய்ப்பாடு
(அ) நாள்
(ஆ) மலர்
(இ) காசு
(ஈ) பிறப்பு
11. ‘Folk literature’ என்னும் ஆங்கிலச்சொல்லுக்கான தமிழ்ச்சொல் தருக.
(அ) வட்டார இலக்கியம்
(ஆ) நாட்டுப்புற இலக்கியம்
(இ) நவீன இலக்கியம்
(ஈ) பண்டைய இலக்கியம்
12. பின்வருவனவற்றுள் எழுவாயுடன் பெயர்ப்பயனிலையைத் தொடரும் தொடரைத் தெரிவு செய்க.
(அ) பேருந்து வருமா?
(ஆ) இனியன் கவிஞர்
(இ) காவிரி பாய்ந்தது
(ஈ) அலை அடித்தது.
விடைக்குறிப்பு
1 - அ
2 - அ
3 - ஈ
4 - அ
5 - அ
6 - ஆ
7 - இ
8 - அ
9 - அ
10 - ஈ
11 - ஆ
12 - ஆ
கருத்துகள்
கருத்துரையிடுக