PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 19

01. அன்பால் கட்டினார் என்பது ...................

(அ) மூன்றாம் வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்

(ஆ) நான்காம் வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்

(இ) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

(ஈ) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

02. பின்வருவனவற்றில் கூட்டுநிலைப் பெயரெச்சத்தைத் தெரிவு செய்க.

(அ) கேட்க வேண்டிய பாடல்

(ஆ) கேட்ட பாடல்

(இ) சொன்ன செய்தி

(ஈ) சொல்லிச் சென்றான்

03. கி.ராஜநாராயணன் குறித்த கூற்றுகளில் எவை சரியானவை

1. கரிசல் எழுத்தாளர்.

2. கரிசல் இலக்கியத்தை இவர்தான் முதன்முதலில் எழுதத் தொடங்கினார்.

3. இவர் கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றை உருவாக்கியுள்ளார்.

(அ) 1, 2, 3 சரியானவை

(ஆ) 1, 2, 3 தவறானவை

(இ)  1, 3 சரியானவை, 2 தவறு

(ஈ) 1, 2 சரியானவை, 3 தவறு

04. அசைஇ என்பது ...............

(அ) இன்னிசை அளபெடை

(ஆ) செய்யுளிசை அளபெடை

(இ) இசைநிறை அளபெடை

(ஈ) சொல்லிசை அளபெடை

05. கூத்தராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

(அ) பெருங்கௌசிகனார்

(ஆ) நன்னன்

(இ) கூத்தர்

(ஈ) குலேச பாண்டியன்

06. பின்வருவனவற்றில் பொருந்தாத ஒன்றைத் தெரிவு செய்க.

(அ) வியத்தல் – பலர்பால் வினைமுற்று விகுதி

(ஆ) பொழிந்த – பெயரெச்ச விகுதி

(இ) வாழ்க – வியங்கோள் வினைமுற்று விகுதி

(ஈ) மலைந்து – வினையெச்ச விகுதி

07. முத்துக் குளிக்கும் கொற்கையின் அரசர் ...................

(அ) நன்னன்

(ஆ) பெருஞ்சேரல் இரும்பொறை

(இ) குலேச பாண்டியன்

(ஈ) அதிவீரராம பாண்டியன்

08. மினசோட்டா தமிழ்ச் சங்கம் மூலம் ‘வாழையிலை விருந்து விழா’ நடைபெறும் நாடு எது?

(அ) அமெரிக்கா

(ஆ) மலேசியா

(இ) சிங்கப்பூர்

(ஈ) இந்தியா

09. பொருத்துக.

1. விளித்தொடர் - (அ) பாடினாள் கண்ணகி

2. வினைமுற்றுத்தொடர் - (ஆ) நண்பா எழுது

3. பெயரெச்சத்தொடர் - (இ) பாடி வந்தான்

4. வினையெச்சத்தொடர் - (ஈ) கேட்ட பாடல்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-

(இ) 1-, 2-, 3-ஆ, 4-அ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

10. கூற்று    : மலைபடுகடாம் என்பது ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று.

காரணம்: புகழ்ந்துப் பாடி பரிசில் பெற்றப் கூத்தர், பரிசில் பெறப் போகும் கூத்தரை வழிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

(அ) கூற்று மட்டும் சரி

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி

(இ) காரணம் மட்டும் சரி

(ஈ) கூற்று காரணம் இரண்டிற்கும் தொடர்பில்லை.

விடைக்குறிப்பு

1 - இ

2 - அ

3 - இ

4 - ஈ

5 - ஆ

6 - அ

7 - ஈ

8 - அ

9 - ஈ

10 - ஆ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்