PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 7
1. அரிய மலர் – இலக்கணக்குறிப்பு தருக.
(அ) குறிப்பு வினையெச்சம்
(ஆ) தெரிநிலை வினையெச்சம்
(இ) குறிப்புப் பெயரெச்சம்
(ஈ) தெரிநிலைப் பெயரெச்சம்
2. பொருத்துக.
1. இன்சொல் - (அ) உவமைத்தொகை
2. கீரிபாம்பு - (ஆ) வினைத்தொகை
3. எழுகதிர் - (இ) உம்மைத்தொகை
4. முத்துப்பல் - (ஈ) பண்புத்தொகை
(அ) 1- ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
(இ) 1- அ, 2-ஈ, 3-இ, 4-ஆ
(ஈ) 1- ஈ, 2-ஆ, 3-அ, 4-இ
3. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்
(அ) இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
(ஆ) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
(இ) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
(ஈ) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
4. பொருத்துக.
1. நேமி - (அ) மலை
2. கோடு - (ஆ) சக்கரம்
3. விரிச்சி - (இ) தோள்
4. சுவல் - (ஈ) நற்சொல்
(அ) 1- ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
(இ) 1- ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1- ஈ, 2-ஆ, 3-அ, 4-இ
5. ‘பொறித்த’ என்னும் அமைந்துள்ள விகுதி
(அ) வினையெச்ச விகுதி
(ஆ) பெயரெச்ச விகுதி
(இ) தொழிற்பெயர் விகுதி
(ஈ) வியங்கோள் வினைமுற்று விகுதி
6. தமிழில் வசனகவிதை தமிழில் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
(அ) பாரதிதாசன்
(ஆ) வாணிதாசன்
(இ) பாரதியார்
(ஈ) பெருஞ்சித்திரனார்
7. பாரதியார் படைப்புகளுள் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.
(அ) கண்ணன் பாட்டு
(ஆ) பாஞ்சாலி சபதம்
(இ) குடும்ப விளக்கு
(ஈ) புதிய ஆத்திசூடி
8. கூற்று: காற்றானது மேற்கிலிருந்து வீசும்போது கோடை எனப்படுகிறது.
காரணம்: வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறது.
(அ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.
(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி.
(இ) கூற்று சரி, காரணம் தவறு.
(ஈ) கூற்று தவறு, காரணம் சரி.
9. உலகக் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ………… இடமும், தமிழகம் ……….. இடமும் வகிக்கிறது.
(அ) முதல், ஐந்தாம்
(ஆ) ஐந்தாம், மூன்றாம்
(இ) ஐந்தாம், முதல்
(ஈ) இரண்டாம், முதல்
10. ‘பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது’ என்னும் நூலை இயற்றியவர்
(அ) பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்
(ஆ) இளங்கோவடிகள்
(இ) ஔவையார்
(ஈ) ஐயூர் முடவனார்
விடைக்குறிப்பு
1 - இ
2 - அ
3 - ஈ
4 - இ
5 - ஆ
6 - இ
7 - இ
8 - ஆ
9 - இ
10 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக