PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 9

1. “உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்

உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்” 

- பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

(அ) உருவகம், எதுகை

(ஆ) மோனை, எதுகை

(இ) முரண், இயைபு

(ஈ) உவமை, எதுகை

2. செய்தி 1 - ஒவ்வோர்ஆண்டும் ஜுன் 15ஐ உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்.

செய்தி 2 - காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே.

செய்தி 3 - காற்றின் ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!

(அ) செய்தி 1 மட்டும் சரி

(ஆ) செய்தி 1,2 ஆகியன சரி

(இ) செய்தி 3 மட்டும் சரி

(ஈ) செய்தி 1,3 ஆகியன சரி

3. “பாடுஇமிழ் பனிக்கடல் பருகி” என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

(அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

(ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

(இ) கடல் நீர் ஒலித்தல்

(ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

4. ‘பெரிய மீசை’ சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

(அ) பண்புத்தொகை

(ஆ) உவமைத்தொகை

(இ) அன்மொழித்தொகை

(ஈ) உம்மைத்தொகை

5. கரும்பு தின்றான். இத்தொடரில் பயின்று வரும் தொகைநிலைத் தொடர் எது?

(அ) வினைத்தொகை

(ஆ) வேற்றுமைத்தொகை

(இ) பண்புத்தொகை

(ஈ) அன்மொழித்தொகை

6.   தமிழெண்ணால் நிரப்புக. தொகைநிலைத்தொடர் ............... வகைப்படும்.

(அ)

(ஆ)

(இ)

(ஈ)

7. நிறம், வடிவம், சுவை, அளவு முதலானவற்றை உணர்த்துவது

(அ) தொழிற்பெயர்

(ஆ) காலப்பெயர்

(இ) இடப்பெயர்

(ஈ) பண்புப்பெயர்

8.   பொருத்துக.

1. வினைத்தொகை - (அ) இன்மொழி

2. பண்புத்தொகை - (ஆ) கொல்களிறு

3. உம்மைத்தொகை - (இ) மலர்க்கை

4. உவமைத்தொகை - (ஈ) தாய்சேய்

(அ) 1- ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4-அ

(இ) 1- ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(ஈ) 1- ஆ, 2-ஈ, 3-அ, 4-இ

9. தங்கமீன்கள் தண்ணீர்த்தொட்டியில் விளையாடுகின்றன. - இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லில் பயின்று வரும் தொகை

(அ) பண்புத்தொகை

(ஆ) வேற்றுமைத்தொகை

(இ) உவமைத்தொகை

(ஈ) உம்மைத்தொகை

10. தொகைநிலைத்தொடரைத் தேர்வு செய்க.

(அ) கரும்பு தின்றான்

(ஆ) நண்பா எழுது!

(இ) பாடினாள் கண்ணகி

(ஈ) சாலச் சிறந்தது

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - ஈ

3 - அ

4 - இ

5 - ஆ

6 - இ

7 - ஈ

8 - இ

9 - இ

10 - அ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்