PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 8
1. இலக்கணக்குறிப்பு அடிப்படையில் வேறுபட்ட ஒன்றைத் தெரிவு செய்க.
(அ) வியத்தல்
(ஆ) நன்மொழி
(இ) நோக்கல்
(ஈ) உரைத்தல்
2. நறுந்தொகை என்னும் நூலை இயற்றியவர்
(அ) பெருங்கௌசிகனார்
(ஆ) நப்பூதனார்
(இ) சீவலமாறன்
(ஈ) இளம்பெருவழுதி
3. பின்வருவனவற்றுள் வேறுபட்ட ஒன்றைத் தெரிவு செய்க.
(அ) கூத்தர்
(ஆ) பாணர்
(இ) விறலியர்
(ஈ) மன்னர்
4. கூற்று: பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மலைபடுகடாம்.
காரணம்: மலையில் எழும் பலவகை ஓசைகளை விளக்குவதால் மலைபடுகடாம் எனப்பட்டது.
(அ) கூற்று சரி, காரணம் தவறு
(ஆ) கூற்று தவறு, காரணம் சரி
(இ) கூற்று, காரணம் இரண்டும் தவறு
(ஈ) கூற்று, காரணம் இரண்டும் சரி
5. ‘வருக’ இச்சொல்லில் அமைந்துள்ள விகுதி
(அ) பெயரெச்ச விகுதி
(ஆ) வியங்கோள் வினைமுற்று விகுதி
(இ) வினையெச்ச விகுதி
(ஈ) தொழிற்பெயர் விகுதி
6. கரிசல் இலக்கியத்தை முதன் முதலில் எழுதத் தொடங்கியவர்
(அ) கி.ராஜநாராயணன்
(ஆ) சோ.தர்மன்
(இ) பா.செயப்பிரகாசம்
(ஈ) கு.அழகிரிசாமி
7. பொருத்துக.
1. பாச்சல் - (அ) கவனமாக
2. பதனம் - (ஆ) பாத்தி
3. மகுளி - (இ) புதியவன்
4. வரத்துக்காரன் - (ஈ) சோற்றுக்கஞ்சி
(அ) 1- ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
(இ) 1- ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1- ஈ, 2-ஆ, 3-அ, 4-இ
8. பொருத்துக.
1. பாடினாள் கண்ணகி - (அ) வேற்றுமைத் தொடர்
2. பாடி மகிழ்ந்தனர் - (ஆ) பெயரெச்சத் தொடர்
3. கேட்ட பாடல் - (இ) வினையெச்சத் தொடர்
4. அன்பால் கட்டனார் - (ஈ) வினைமுற்றுத் தொடர்
(அ) 1- ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
(இ) 1- ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1- ஈ, 2-ஆ, 3-அ, 4-இ
9. பொருத்துக.
1. எழுவாய்த்தொடர் - (அ) சாலச் சிறந்தது
2. விளித்தொடர் - (ஆ) மற்றொன்று
3. உரிச்சொல்தொடர் - (இ) இனியன் கவிஞர்
4. இடைச்சொல் தொடர் - (ஈ) நண்பா எழுது!
(அ) 1- ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
(ஆ) 1- ஈ, 2-ஆ, 3-இ, 4-அ
(இ) 1- இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(ஈ) 1- ஈ, 2-ஆ, 3-அ, 4-இ
10. ‘கறங்கு இசை விழவின் உறந்தை’ என்ற அகநானூறு அடியில் உள்ள உறந்தை (உறையூர்) அமைந்துள்ள மாவட்டம்
(அ) சேலம்
(ஆ) திருச்சி
(இ) நாமக்கல்
(ஈ) திருப்பூர்
விடைக்குறிப்பு
1 - ஆ
2 - இ
3 - ஈ
4 - ஈ
5 - ஆ
6 - ஈ
7 - இ
8 - அ
9 - இ
10 - ஆ
கருத்துகள்
கருத்துரையிடுக