PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 15

01. சிலப்பதிகாரத்தில் கண்ணகி எதற்காக பெரிதும் வருந்தியதாக இளங்கோவடிகள் கூறுகிறார்?

(அ) கோவலனை பிரிந்ததற்கு

(ஆ) விருந்தினரை போற்ற முடியாத நிலைக்கு

(இ) வணிகத்தில் ஏற்பட்ட இழப்புக்கு

(ஈ) தன்னுடைய செல்வம் அழிந்ததற்கு

02. கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாக கூறும் நூலும் ஆசிரியரும்

(அ) கம்பராமாயணம், கம்பர்

(ஆ) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

(இ) கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்

(ஈ) திருக்குறள், திருவள்ளுவர்

03. விருந்தினரைப் பேணுவதற்கு தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டு குத்தி எடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தால் தலைவி என்கிறது புறநானூறு. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

(அ) நிலத்திற்கேற்ற விருந்து

(ஆ) இன்மையிலும் விருந்து

(இ) அல்லிலும் விருந்து

(ஈ) உற்றாரின் விருந்து

04. இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத் தமிலர் உண்டலும் இலரே எனக் கூறிய நூலும் ஆசிரியரும்

(அ) புறநானூறு, இளம்பெருவழுதி

(ஆ) திருக்குறள், திருவள்ளுவர்

(இ) சிலப்பதிகாரம், இளங்கோவடிகள்

(ஈ) கலிங்கத்துப்பரணி, செயங்கொண்டார்

05. நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடும் நல்லியல்பு குடும்ப தலைவிக்கு ண்டு என்கிறது நற்றிணை. இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

(அ) நிலத்திற்கேற்ற விருந்து

(ஆ) இன்மையிலும் விருந்து

(இ) அல்லிலும் விருந்து

(ஈ) உற்றாரின் விருந்து

06. ‘நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்று குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்கிறது சிறுபாணாற்றுப்படை இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

(அ) நிலத்திற்கேற்ற விருந்து

(ஆ) இன்மையிலும் விருந்து

(இ) அல்லிலும் விருந்து

(ஈ) உற்றாரின் விருந்து

07. பொருத்துக.

1. கொன்றைவேந்தன் - (அ) சிவராமன்

2. கலிங்கத்துப்பரணி - (ஆ) சங்க இலக்கியம்

3. ஆறாம் திணை - (இ) ஜெயங்கொண்டார்

4. புறநானூறு - (ஈ) ஔவையார்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-, 3-இ, 4-

(இ) 1-, 2-, 3-அ, 4-ஆ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

08. கூற்று: நாயக்கர், மராட்டியர் ஆட்சி காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச் செல்வோர்களுக்குக் கட்டப்பட்டன.

காரணம்: கால மாற்றத்தில் புதியவர்களாகிய விருந்தினர்களை வீட்டுக்குள் அழைத்து உணவிடுவது குறைந்தது.

(அ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி.

(இ) கூற்று சரி, காரணம் தவறு.

(ஈ) கூற்று தவறு, காரணம் சரி.

09. பொருத்துக.

1. வாழை இலையின் குறுகலான பகுதி - (அ) உண்பவரின் வலப்பக்கம்

2. வாழை இலையின் விரிந்த பகுதி - (ஆ) காய்கறி, கீரை, கூட்டு

3. வாழை இலையின் இடப்பக்கம் - (இ) உண்பவரின் இடப்பக்கம்

4. வாழை இலையின் வலப்பக்கம் - (ஈ) உப்பு, ஊறுகாய், இனிப்பு

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-, 3-இ, 4-

(இ) 1-, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-ஆ

10. அரசராகவும் புலவராகவும் விளங்கியவர்

(அ) நன்னன்

(ஆ) குலேச பாண்டியன்

(இ) அதிவீரராம பாண்டியன்

(ஈ) கம்பர்

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - அ

3 - ஆ

4 - அ

5 - இ

6 - அ

7 - ஈ

8 - ஆ

9 - இ

10 - இ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்