PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 10

1. காலம் காட்டும் இடைநிலைகள் பெயரெச்சங்களோடு தொக்கி இருப்பது

(அ) பண்புத்தொகை

(ஆ) வினைத்தொகை

(இ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

(ஈ) உவமைத்தொகை

2. உம்மைத்தொகையோடு தொடர்பில்லாத ஒன்றைத் தேர்ந்தெடுக்க.

(அ) உம்மைத்தொகை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்னும் நான்கு அளவுப் பெயர்களைத் தொடர்ந்து வரும்.

(ஆ) தாய்சேய் இருவரும் நலம்.

(இ) சேர, சோழ, பாண்டியர்கள் சிறப்பாக ஆட்சி செய்தார்கள்.

(ஈ) சொற்களுக்கு இடையிலும் இறுதியிலும் உம் என்னும் இடைச்சொல் வெளிப்படையாக வரும்.

3. தமிழ்த்தொண்டு என்பது

(அ) ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(ஆ) மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(இ) நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(ஈ) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை

4.   மலர்க்கை என்பதில்

(அ) மலர் - உவமை, கை – உவமேயம்

(ஆ) மலர் - உவமேயம், கை - உவமை

(இ) மலர் - உவமஉருபு, கை – உவமை

(ஈ) மலர் - உவமேயம், கை – உவமஉருபு

5. பாரதியார் பணியாற்றிய இதழ்கள்

(அ) இந்தியா, சுதேசமித்திரன்

(ஆ) குயில், தமிழ்

(இ) இந்தியா, தமிழ்ச்சிட்டு

(ஈ)  எழுத்து, கணையாழி

6. இனிய வாசனையுடன் வா! என்று பாரதியார் அழைத்தது

(அ) மேகம்

(ஆ) காற்று

(இ) மழை

(ஈ)  நிலம்

7. ‘காலம் கரந்த பெயரெச்சம் என்பது’

(அ) பண்புத்தொகை

(ஆ) வினைத்தொகை

(இ) உவமைத்தொகை

(ஈ) வேற்றுமைத்தொகை

8. அன்பால் கட்டினார் என்பது ...................

(அ) மூன்றாம் வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்

(ஆ) நான்காம் வேற்றுமைத்தொகைநிலைத்தொடர்

(இ) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

(ஈ) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

9. பாரதியார் படைப்புகளில் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.

(அ) பாப்பாப் பாட்டு

(ஆ) குயில் பாட்டு

(இ) பாஞ்சாலி சபதம்

(ஈ) குடும்ப விளக்கு

10. கூத்தராற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் யார்?

(அ) பெருங்கௌசிகனார்

(ஆ) நன்னன்

(இ) கூத்தர்

(ஈ) எவருமில்லை

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - ஈ

3 - இ

4 - அ

5 - அ

6 - ஆ

7 - ஆ

8 - இ

9 - ஈ

10 - இ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்