PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 11

1. ‘நனந்தலை உலகம்’ இத்தொடரின் பொருள்

(அ) நனைந்த உலகம்

(ஆ) சிறிய உலகம்

(இ) சுற்றும் உலகம்

(ஈ) அகன்ற உலகம்

2. முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள்

(அ) புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

(ஆ) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

(இ) ஊடலும் ஊடல் நிமித்தமும்

(ஈ) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

3. முல்லைப்பாட்டின் பா வகை

(அ) வெண்பா

(ஆ) கலிப்பா

(இ) ஆசிரியப்பா

(ஈ) வஞ்சிப்பா

4. உலகம் ஐம்பெரும் பூதங்களால் ஆனது என்றவர் ......................

(அ) தொல்காப்பியர்

(ஆ) திருமூலர்

(இ) பாரதியார்

(ஈ) நப்பூதனார்

5. ‘நறுவீ’ என்னும் சொல்லின் பொருள்

(அ) நல்ல மலர்கள்

(ஆ) நன்கு விரிந்த மலர்கள்

(இ) மகரந்தம் தூவும் மலர்கள்

(ஈ) நறுமணமுடைய மலர்கள்

6. கூற்று    : மலைபடுகடாம் என்பது ஆற்றுப்படை நூல்களுள் ஒன்று.

காரணம்: புகழ்ந்துப் பாடி பரிசில் பெற்றப் கூத்தர், பரிசில் பெறப் போகும் கூத்தரை வழிப்படுத்துவதாய் அமைந்துள்ளது.

(அ) கூற்று மட்டும் சரி

(ஆ) கூற்று, காரணம் இரண்டும் சரி

(இ) காரணம் மட்டும் சரி

(ஈ) கூற்று காரணம் இரண்டிற்கும் தொடர்பில்லை.

7.   அண்ணன் தம்பி வந்தனர் – இத்தொடரில் உள்ள தொகைச் சொல்லின் விரி

(அ) அண்ணனுக்குத் தம்பி

(ஆ) அண்ணனும் தம்பியும்

(இ) அண்ணனால் தம்பி

(ஈ) அண்ணனுடன் தம்பி

8. தைத்திங்கள் என்பது

(அ) அன்மொழித்தொகை

(ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

(இ) உம்மைத்தொகை

(ஈ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை

9. ‘Sea Breeze’ என்ற ஆங்கிலச் சொல்லிற்குரிய தமிழ்ச்சொல்லை எழுதுக.

(அ) கடல்காற்று

(ஆ) சுழல்காற்று

(இ) நிலக்காற்று

(ஈ) பெருங்காற்று

10.   காற்றை பாரதியார் ‘மயலுறுத்து’ அழைப்பதைக் குறிக்கும் சொற்றொடர்

(அ) மணம் வீசும் காற்றாய் நீ வா

(ஆ) மனதை மயங்கச் செய்யும் மணத்தோடு நீ வா

(இ) மயிலாடும் காற்றாய் நீ வா

(ஈ) மகரந்தம் சுமந்து கொண்டு நீ வா

விடைக்குறிப்பு

1 - ஈ

2 - ஆ

3 - இ

4 - அ

5 - ஈ

6 - ஆ

7 - ஆ

8 - ஈ

9 - அ

10 - ஆ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்