PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 13

01. மயங்கொலிப் பிழைகளற்ற தொடரைத் தெரிவு செய்க.

(அ) கரடிகள் மரத்தின் மீதேறி இலுப்பைப் பூக்களைப் பறித்து உண்ணும்.

(ஆ) கரடிகள் மறத்தின் மீதேறி இளுப்பைப் பூக்களைப் பறித்து உண்ணும்.

(இ) கரடிகள் மரத்தின் மீதேரி இலுப்பைப் பூக்களைப் பறித்து உண்ணும்.

(ஈ) கறடிகள் மரத்தின் மீதேறி இலுப்பைப் பூக்களைப் பரித்து உண்ணும்.

02. பொருத்துக.

1. குயில்பாட்டு - (அ) திருமூலர்

2. அதோ அந்தப் பறவை போல - (ஆ) பாரதியார்

3. உலகின் மிகச்சிறிய தவளை - (இ) ச.முகமது அலி

4. திருமந்திரம் - (ஈ) எஸ்.ராமகிருஷ்ணன்

(அ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ

(ஆ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(இ) 1-, 2-, 3-ஆ, 4-அ

(ஈ) 1-அ, 2-ஆ, 3-ஈ, 4-இ

03. ‘பொறித்த’ என்ற சொல்லின் வேர்ச்சொல்லைக் கண்டறிந்து எழுதுக.

(அ) பொறிந்து

(ஆ) பொறி

(இ) பொறித்தான்

(ஈ) பொறியாத

04. "நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை” 

என வரும் முல்லப்பாட்டில் இடம்பெற்ற ‘தடக்கை’ என்பதற்கு இலக்கணக் குறிப்பு தருக.

(அ) பண்புத்தொகை

(ஆ) வினைத்தொகை

(இ) உவமைத்தொகை

(ஈ) உரிச்சொல்

05. "நீர் செல, நிமிர்ந்த மாஅல் போல” என வரும் முல்லைப்பாட்டில் இடம்பெற்ற ‘மாஅல்’ என்ற சொல்லுக்கான பொருளும் இலக்கணக்குறிப்பும் தருக.

(அ) நீர், செய்யுளிசை அளபெடை

(ஆ) திருமால், செய்யுளிசை அளபெடை

(இ) திருமால், இன்னிசை அளபெடை

(ஈ) திருமால், சொல்லிசை அளபெடை

06. பொருள் தருக. ப்ராண ரஸம்

(அ) காற்று

(ஆ) உயிர்வளி

(இ) மந்தவளி

(ஈ) வாயுக்காற்று

07. ‘பாட்டுக்கொரு புலவன்’ எனப் பாராட்டப்பட்டவர் யார்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) இளங்கோவடிகள்

(ஈ) கம்பர்

08. எட்டயபுர ஏந்தலாக அறியப்பட்டவர்

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) இளங்கோவடிகள்

(ஈ) கம்பர்

09. கூற்று 1: பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இரண்டு வகைப்படும்.

கூற்று 2: முல்லைத் திணைக்குரிய பெரும்பொழுது ஆனி, ஆடி ஆகும்.

கூற்று 3: முல்லைத் திணைக்குரிய சிறுபொழுது மாலை ஆகும்.

(அ) கூற்று 1, 2 சரி; கூற்று 3 தவறு

(ஆ) கூற்று 1 சரி; கூற்று 2, 3 தவறு

(இ) கூற்று 1, 2, 3 சரி

(ஈ) கூற்று 1, 3 சரி; கூற்று 2 தவறு

10. ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ? என ஐயம் கொண்ட சங்ககாலப் பெண்கள் .................... கேட்டனர்.

(அ) வாக்கு

(ஆ) விரிச்சி

(இ) வரம்

(ஈ) அருள்

11. ‘அலைகள் எண்ணெய் பூசியவை போல் மொழுமொழுவென நெளிந்தன’. இத்தொடரில் பயின்று வந்துள்ள நயம்

(அ) உருவகம்

(ஆ) அடுக்குத்தொடர்

(இ) உவமை

(ஈ) இறைச்சி

12. ஆடுமாடுகள் தண்ணீரைக் குடித்தன. – இத்தொடரில் உள்ள தொகை

(அ) உவமைத்தொகை

(ஆ) உம்மைத்தொகை

(இ) வினைத்தொகை

(ஈ) பண்புத்தொகை

விடைக்குறிப்பு

1 - அ

2 - அ

3 - ஆ

4 - ஈ

5 - ஆ

6 - ஆ

7 - ஆ

8 - ஆ

9 - ஈ

10 - ஆ

11 - இ

12 - ஆ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்