TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 41

1. பொருத்துக.

1. கெழு - (அ) ஏர் புதிதா?

2. பதம் - (ஆ) விரைந்து

3. கு.ப.ரா. - (இ) பக்குவம்

4. கடுகி - (ஈ) கம்பு

(அ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

(ஆ) 1-ஈ, 2-இ, 3-அ, 4-

(இ) 1-, 2-, 3-ஆ, 4-அ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

2. ‘சிலம்புச்செல்வர்’ எனப் போற்றப்படுபவர் யார்?

(அ) சீத்தலைச் சாத்தனார்

(ஆ) இளங்கோவடிகள்

(இ) ம.பொ.சிவஞானம்

(ஈ) மார்ஷல் ஏ.நேசமணி

3. பொருத்துக.

1. காழியர் - (அ) அப்பம் விற்பவர்

2. வாசவர் - (ஆ) விற்பவர்

3. கூவியர் - (இ) பிட்டு விற்பவர்

4. விலைஞர் - (ஈ) நறுமணப்பொருள் விற்பவர்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(ஈ) 1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ

4. மெய்க்கீர்த்தி என்பது

(அ) கல்வெட்டில் பொறிக்கப்பட்ட சிற்பங்கள்

(ஆ) அழியாப்புகழ் பெற்ற நூல்கள்

(இ) புலவர்களால் எழுதப்பட்டு கல்தச்சர்களால் கல்லில் பொறிக்கப்பட்டவை

(ஈ) மெய்யான புகழ், கொடை, வீரம் முதலியன குறித்த நூல்கள்

5. ‘மருளுடையன இளமான்களே’ இத்தொடர் உணர்த்தும் உட்கருத்து

(அ) மான்கள் மருள்கின்றன

(ஆ) இளமான்கள் மருளவில்லை

(இ) பெண்கள் மருள்கின்றனர்

(ஈ) மக்கள் மருளவில்லை

6. ‘மாட்டைப் பூட்டிக் காட்டைக் கீறுவோம்’ காடும் கீறலும் குறிப்பது

(அ) வனத்தையும் விலங்கையும்

(ஆ) வயலையும் வனத்தையும்

(இ) வயலையும் உழவையும்

(ஈ) வனத்தையும் உழவையும்

7. பொழுதேறப் பொன்பரவும் – ‘பொன்பரவும்’ என்னும் சொல்லின் பொருள்

(அ) நிலவின் ஒளி பரவும்

(ஆ) நிலத்தில் பசுமை பரவும்

(இ) கதிரவனின் ஒளி பரவும்

(ஈ) நிலத்தில் விதை பரவும்

8. மெய்க்கீர்த்திக்கு முன்னோடியாக இருந்த சங்க இலக்கிய நூல்

(அ) பரிபாடல்

(ஆ) பதிற்றுப்பத்து

(இ) முல்லைப்பாட்டு

(ஈ) புறநானூறு

9. கோவலன் கண்ணகி கதையைக் கூறி ‘அடிகள் நீரே அருளுக!’ என யாரிடம் யார் கூறினார்?

(அ) சீத்தலைச்சாத்தனாரிடம் இளங்கோவடிகள்          

(ஆ) மன்னனிடம் சீத்தலைச்சாத்தனார்              

(இ) சீத்தலைச்சாத்தனாரிடம் மன்னன் 

(ஈ) இளங்காவடிகளிடம் சீத்தலைச்சாத்தனார்

10. ‘நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்’ எனக் கூறியவரும் அவர் படைத்த காப்பியமும்

(அ) சீத்தலைச்சாத்தனார், மணிமேகலை

(ஆ) கம்பர், கம்பராமாணயம்

(இ) இளங்கோவடிகள், சிலப்பதிகாரம்

(ஈ) சீத்தலைச்சாத்தனார், சிலப்பதிகாரம்

11. பொருத்துக.

1. தண் - (அ) தானியம்

2. கூலம் - (ஆ) குளிர்

3. வழு - (இ) செல்வம்

4. வெறுக்கை - (ஈ) குற்றம்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ

(இ)  1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-இ, 4-ஈ

12. “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என முழங்கியவர்

(அ) மங்கலங்கிழார்

(ஆ) கே.எம்.பணிக்கர்

(இ) ம.பொ.சிவஞானம்

(ஈ) மார்ஷல் ஏ.நேசமணி

13. புறப்பொருளில் வீரர்கள் வஞ்சிப் பூவினைச் சூடிக்கொண்டு எங்குச் செல்வர்?

(அ) கோட்டையைக் காப்பாற்ற

(ஆ) ஆநிரைகளைக் கவர

(இ) போருக்கு

(ஈ) வெற்றியைக் கொண்டாட

14. அறிவு விளக்கம் பெறும் வழிவகையாக ம.பொ.சி கூறுவன

(அ) கல்வி, கேள்வி

(ஆ) கல்வி, கலை

(இ) பார்த்தல், எழுதுதல்

(ஈ) எழுதுதல், பேசுதல்

15. ம.பொ.சி யின் தன் வரலாற்று நூல்

(அ) நமது போராட்டம்

(ஆ) மக்கள் போராட்டம்

(இ) சிற்றகல் ஒளி

(ஈ) எனது போராட்டம்

விடைக்குறிப்பு

1 - ஆ

2 - இ

3 - ஆ

4 - இ

5 - ஈ

6 - இ

7 - இ

8 - ஆ

9 - அ

10 - இ

11 - இ

12 - இ

13 - இ

14 - அ

15 - ஈ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்