TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 42

1. ‘எல்லைத் தெய்வம் எல்லாம் காக்கும்’ இவ்வடியில் பயின்று வந்துள்ள நயம்

(அ) சீர் இயைபு

(ஆ) அடி எதுகை

(இ) அடி மோனை

(ஈ) சீர் மோனை

2. கூற்று 1:   தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் முதன்முதலில் களத்திற்குச் சென்று செய்திகளைத் திரட்டி எழுதியவர் ராஜம் கிருஷ்ணன்.

கூற்று 2:  ”எழுத்துகளில் நேர்மையான சினம், அறச் சீற்றம் இருக்க வேண்டும்” – ராஜம் கிருஷ்ணன்.

கூற்று 3:  ராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சி மலர் புதினம் நீலகிரி, படுகர் இன மக்களைப் பற்றியது.

(அ) கூற்று 1, 2 சரி; கூற்று 3 தவறு

(ஆ) கூற்று 1 சரி; கூற்று 2, 3 தவறு

(இ) கூற்று 1, 2, 3 சரி

(ஈ) கூற்று 1, 2, 3 தவறு

3. ஐம்பெருங்காப்பிய முறைவைப்பு பற்றிக் கூறும் நூல்

(அ) சிலப்பதிகாரம்

(ஆ) பன்னிருபாட்டியல்

(இ) புறப்பொருள் வெண்பாமாலை

(ஈ) திருத்தணிகையுலா

4. ‘மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றாமது எங்களுக்கு வேண்டும்’

- மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே

(அ) திருப்பதியும் திருத்தணியும்

(ஆ) திருத்தணியும் திருப்பதியும்

(இ) திருப்பதியும் திருச்செந்தூரும்

(ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

5. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது ...................

(அ) திருக்குறள்

(ஆ) புறநானூறு

(இ) கம்பராமாயணம்

(ஈ) சிலப்பதிகாரம்

6. பொருத்துக.

1. ஓசுநர் - (அ) நறுமணப்பொடி

2. இசை - (ஆ) எண்ணெய் விற்பவர்

3. சுண்ணம் - (இ) செல்வம்

4. வெறுக்கை - (ஈ) பாணர்

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

(இ) 1-, 2-, 3-அ, 4-ஆ

(ஈ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

7. பொருத்துக.

1. கோட்டையைக் காத்தல் - (அ) வஞ்சித் திணை

2. வலிமையே பெரிது - (ஆ) நொச்சித் திணை

3. மண்ணாசை - (இ) வெட்சித் திணை

4. ஆநிரை கவர்தல் - (ஈ) தும்பைத் திணை

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

(இ) 1-, 2-, 3-அ, 4-ஆ

(ஈ)  1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

8. ”சங்க இலக்கியங்கள் ஐந்திணைக்குமான ஒழக்கங்களை இரு திணைகளும் பயன்பெற எடுத்தியம்புகின்றன.” – இத்தொடரில் அமைந்துள்ள தொகைச் சொற்களின் பொருத்தமான விரியைக் கண்டறிக.

(அ) குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை, நல்வினை, தீவினை

(ஆ) குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, உயர்திணை, அஃறிணை

(இ) குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை, மருதம், அறம், பொருள், இன்பம்

(ஈ) குறிஞ்சி, மலை, முல்லை, காடு, மருதம், வயல், நெய்தல், கடல், பனை, திணை

9.   கோப்பரகேசரி, திருபுவனச்சக்கரவர்த்தி போன்ற பட்டங்களைக் கொண்டவர்

(அ) இரண்டாம் இராசராசன்

(ஆ) முதலாம் இராசராசன்

(இ) இராஜேந்திர சோழன்

(ஈ) குலோத்துங்க சோழன்

10. யாருடைய காலம் முதல் மெய்க்கீர்த்தி கல்லில் வடிக்கப்பட்டது

(அ) இரண்டாம் இராசராசன்

(ஆ) முதலாம் இராசராசன்

(இ) இராஜேந்திர சோழன்

(ஈ) குலோத்துங்க சோழன்

11. மெய்க்கீர்த்தி என்பது

(அ) சங்க இலக்கியம்

(ஆ) நீதி இலக்கியம்

(இ) பக்தி இலக்கியம்

(ஈ) கல் இலக்கியம்

12. திசைபாலர் மொத்தம் ………….

(அ) எண்மர்

(ஆ) ஐவர்

(இ) மூவர்

(ஈ) நால்வர்

13. பின்வருவனவற்றுள் உடம்படுமெய் பயின்றுவந்துள்ள சொல்லைத் தெரிவு செய்க.

(அ) செய்வினை

(ஆ) கைவினை

(இ) பால்வகை

(ஈ) மயங்கிய

14. சிலப்பதிகாரத்தோடு தொடர்புடைய காப்பியம்

(அ) மணிமேகலை

(ஆ) குண்டலகேசி

(இ) சீவகசிந்தாமணி

(ஈ) வளையாபதி

15.  இளங்கோவடிகள் ………… நாட்டைச் சேர்ந்தவர்.

(அ) சோழ

(ஆ) சேர

(இ) பாண்டிய

(ஈ) கொங்கு

விடைக்குறிப்பு

1 - ஈ

2 - அ

3 - ஈ

4 - அ

5 - ஈ

6 - அ

7 - அ

8 - ஆ

9 - அ

10 - ஆ

11 - ஈ

12 - அ

13 - ஈ

14 - அ

15 - ஆ





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்