TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 45

01. கலைச்சொல் தருக. Territory

(அ) நிலப்பகுதி

(ஆ) பாசனப்பகுதி

(இ) வணிகப்பகுதி

(ஈ) தீவிரப்பகுதி

02. ‘என் கதை’ என்னும் நூலின் ஆசிரியர்

(அ) நாமக்கல் கவிஞர்

(ஆ) ம.பொ.சி

(இ) கு.ப.இராஜகோபலன்

(ஈ) ராஜம் கிருஷ்ணன்

03. ராஜம் கிருஷ்ணத்தின் நூல்களை அதன் மையப்பொருளோடு பொருத்துக.

1. கூட்டுக்குஞ்சுகள் - (அ) உப்பளத் தொழிலாளர்கள்

2. கரிப்பு மணிகள் - (ஆ) குழந்தைத் தொழிலாளர்கள்

3. அலைவாய்க் கரையில் - (இ) வேளாண் தொழிலாளர்கள்

4. சேற்றில் மனிதர்கள் - (ஈ) மீனவர்கள்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(ஈ) 1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ

04.  ராஜம் கிருஷ்ணத்தின் நூல்களை அதன் மையப்பொருளோடு பொருத்துக.

1. மண்ணகத்துப் பூந்துளிகள் - (அ) வேளாண் தொழிலாளர்கள்

2. வேருக்கு நீர் - (ஆ) நீலகிரி, படுகர் இன மக்கள்

3. குறிஞ்சித் தேன் - (இ) வரலாற்றுப் புதினம்

4. பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி - (ஈ) பெண்குழந்தைகள்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ

05.   ராஜம் கிருஷ்ணனின் சாகித்திய அகாதெமி விருது பெற்ற நூல்

(அ) கரிப்பு மணிகள்

(ஆ) குறிஞ்சித்தேன்

(இ) வேருக்கு நீர்

(ஈ) கூட்டுக்குஞ்சுகள்

06. ராஜம் கிருஷ்ணனின் கூற்றுகளுள் தவறானவற்றைத் தெரிவு செய்க.

கூற்று 1: சமூகச் சிக்கல்களை கதையாக எழுதினார்.

கூற்று 2: மக்கள் வாழும் பகுதிக்குள் சென்று களப்பணியாற்றிக் கதைகளை எழுதினார்.

கூற்று 3: எழுத்துகளில் நேர்மையான சினம், அறச்சீற்றம் இருக்க வேண்டும்.

(அ) கூற்று 1, 2 சரி; கூற்று 3 தவறு

(ஆ) கூற்று 1 சரி; கூற்று 2, 3 தவறு

(இ) கூற்று 1, 2, 3 சரி

(ஈ) கூற்று 1, 2, 3 தவறு

07. எம்.எஸ் சுப்புலட்சுமி பற்றிய தொடர்களில் தவறானவற்றைத் தெரிவு செய்க.

(அ) ஐ.நா அவையில் பாடினார்.                   

(ஆ) ஜனகணமன பாடலுக்கு மெய்ப்பாடுகளோடு ஆடினார்.

(இ) தாமரையணி விருது பெற்றபோது, ஹெலன் கெல்லர் தொட்டுத் தடவிப் பாராட்டினார்.

(ஈ) மீரா என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

08. நோபல் பரிசுக்கு இணையான மகசேசே விருது பெற்ற முதல் இசைக்கலைஞர்

(அ) எம்.எஸ்.சுப்புலட்சுமி

(ஆ) பண்டிட் இரவி சங்கர்

(இ) பாலசரஸ்வதி

(ஈ) ராஜம்கிருஷ்ணன்

09. சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

(அ) உழவு, மண், ஏர், மாடு

(ஆ) மண், மாடு, ஏர், உழவு

(இ) உழவு, ஏர், மண், மாடு

(ஈ) ஏர், உழவு, மாடு, மண்

10. தன் நாட்டு மக்களுக்குத் தந்தையும் தாயும் மகனுமாக இருந்த அரசன் என்னும் மெய்க்கீர்த்தித் தொடர் உணர்த்தும் பொருள்

(அ) மேம்பட்ட நிருவாகத்திறன் பெற்றவர்

(ஆ) மிகுந்த செல்வம் உடையவர்

(இ) பண்பட்ட மனிதநேயம் கொண்டவர்

(ஈ) நெறியோடு நின்று காவல் காப்பவர்

11.   பத்துப்பாட்டு நூல்களுள் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.

(அ) பதிற்றுப்பத்து

(ஆ) குறிஞ்சிப்பாட்டு

(இ) முல்லைப்பாட்டு

(ஈ) பட்டினப்பாலை

12. எட்டுத்தொகை நூல்களுள் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.

(அ) மதுரைக்காஞ்சி

(ஆ) ஐங்குறுநூறு

(இ) கலித்தொகை

(ஈ) அகநானூறு

13. நானிலங்களுள் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.

(அ) குறிஞ்சி

(ஆ) முல்லை

(இ) மருதம்

(ஈ) பாலை

14. அறுசுவைகளுள் பொருந்தாதவற்றைத் தெரிவு செய்க.

(அ) கார்ப்பு

(ஆ) துவர்ப்பு

(இ) உவர்ப்பு

(ஈ) உவப்பு

15. பிரித்து எழுதுக. பாடாண்திணை

(அ) பாடா+திணை

(ஆ) பாடு+ஆண்+திணை

(இ) பாடு+ஆண்திணை

(ஈ) பா+ஆண்+திணை 

விடைக்குறிப்பு

1 - அ

2 - அ

3 - இ

4 - ஈ

5 - இ

6 - இ

7 - ஆ

8 - அ

9 - இ

10 - ஈ

11 - அ

12 - அ

13 - ஈ

14 - ஈ

15 - ஆ


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்