TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 46
01. பொருத்துக.
1. கோட்டையைக் காத்தல் - (அ) பொதுவியல்
2.
ஒருதலைக் காமம் - (ஆ) பெருந்திணை
3.
பொருந்தாக் காமம் - (இ) கைக்கிளை
4.
பொதுவான செய்திகள் - (ஈ) நொச்சி
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
02. தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
(அ) கரந்தைத்திணை என்பது ஆநிரைகளை மீட்டல்
(ஆ) இரு நாட்டு வீரர்களும் சண்டையிடுவது தும்பைத்திணையாகும்.
(இ) மண்ணாசைக் கருதிப் போருக்குச் செல்வது காஞ்சித்திணையாகும்.
(ஈ) வெற்றியைக் கொண்டாடுவது வாகைத்திணையாகும்.
03. உழுபவருக்கே நில உரிமை இயக்கத்தின் நோக்கம்
(அ) வேளாண்மையில் உள்ள குறைகளை சரி செய்வது
(ஆ) வேளாண்மையில் அதிக உற்பத்தி செய்வது
(இ) வேளாண்மைக்கு நீர் மேலாண்மை செய்வது
(ஈ) வேளாண்மை இல்லாத காலத்திலும் உழவருக்கு வருமானம் கிடைக்கச் செய்வது
04. இசைப்பேரரசி என்று நேருவால் அழைக்கப்பட்டவர்
(அ) ராஜம்கிருஷ்ணன்
(ஆ) பாலசரசுவதி
(இ) எம்.எஸ்.சுப்புலட்சுமி
(ஈ) எஸ்.ஜானகி
05. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மருவூர்ப்பாக்கம் அமைந்த நகரம்
(அ) மதுரை
(ஆ) புகார்
(இ) காவிரிப்பூம்பட்டினம்
(ஈ) வஞ்சி
06. பிரித்து எழுதுக. நன்கலம்
(அ) நன்+கலம்
(ஆ) நன்மை+கலம்
(இ) நல்+கலம்
(ஈ) ந+கலம்
07. உரையிடப்பட்ட பாட்டுடைச் செய்யுள் என்பது
(அ) மணிமேகலை
(ஆ) மெய்க்கீர்த்தி
(இ) சிலப்பதிகாரம்
(ஈ) மணநூல்
08. பொருள் தருக. கடுகிச் செல்
(அ) மெதுவாகச் செல்
(ஆ) ஊர்ந்து செல்
(இ) நகர்ந்து செல்
(ஈ) விரைந்து செல்
09. இலக்கணக்குறிப்பு தருக. தொழுது.
(அ) பெயரெச்சம்
(ஆ) வினையெச்சம்
(இ) தொழிற்பெயர்
(ஈ) எதிர்மறைத் தொழிற்பெயர்
10. பொருத்துக.
1. ஆசுகவி - (அ) விரிவான கவிதை எழுதுபவர்
2. மதுரகவி - (ஆ) சித்திர வடிவங்களில் கவிதை எழுதுபவர்
3. சித்திரகவி - (இ) இனிய கவிதை எழுதுபவர்
4. வித்தாரகவி - (ஈ) வேகமாக கவிதை எழுதுபவர்
(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ
11. சரியான கூற்றுகளைத் தெரிவு செய்க.
கூற்று 1: இருவர் உரையாடுவது போன்ற ஓசை செப்பலோசை.
கூற்று 2: சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை அகவலோசை.
கூற்று 3: கன்று துள்ளினாற்போலச் சீர்தோறும் துள்ளிவரும் ஓசை துள்ளலோசை.
(அ) கூற்று 1, 2 சரி; கூற்று 3 தவறு
(ஆ) கூற்று 1 சரி; கூற்று 2, 3 தவறு
(இ) கூற்று 1, 2, 3 சரி
(ஈ) கூற்று 1, 2, 3 தவறு
12. ‘யாப்பதிகாரம்’ என்னும் நூலை இயற்றியவர்
(அ) புலவர் குழந்தை
(ஆ) பவணந்தி
(இ) தொல்காப்பியர்
(ஈ) வீரமாமுனிவர்
13. பாரியாண்ட பறம்புமலை அமைந்துள்ள மாவட்டம்
(அ) ஈரோடு
(ஆ) சிவகங்கை
(இ) சேலம்
(ஈ) கோயம்புத்தூர்
14. ‘மீட்சி விண்ணப்பம்’ என்னும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் .................
(அ) உமாமகேஸ்வரி
(ஆ) கு.ப.ராஜகோபாலன்
(இ) தி.சொ.வேணுகோபால்
(ஈ) ம.பொ.சிவஞானம்
15. "ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை” இவ்வடிகளில் அவனும் யானும் குறிப்பவை
(அ) கடவுளும் கவிஞனும்
(ஆ) கவிஞனும் அரசனும்
(இ) அரசனும் மக்களும்
(ஈ) மக்களும் மனங்களும்
விடைக்குறிப்பு
1 - ஈ
2 - இ
3 - ஈ
4 - இ
5 - ஆ
6 - ஆ
7 - இ
8 - ஈ
9 - ஆ
10 - ஈ
11 - இ
12 - அ
13 - ஆ
14 - இ
14 - அ
கருத்துகள்
கருத்துரையிடுக