செவ்வாய், 16 செப்டம்பர், 2025

TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

  தேர்வு - 47

1. கூற்று: தமிழர் பொருள் ஈட்டி அறம் செய்து இன்புற்றனர்.

காரணம்: இல்வாழ்க்கையை அறவாழ்க்கையாகக் கொண்டனர்.

(அ) கூற்று சரி, காரணம் தவறு

(ஆ) கூற்று தவறு, காரணம் சரி

(இ) கூற்று, காரணம் இரண்டும் சரி

(ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

2. சமயக் கலப்பில்லாத மானிட அறம் இயல்பாக நிலவிய காலம்

(அ) அறநெறிக்காலம்

(ஆ) சங்ககாலம்

(இ) காப்பியகாலம்

(ஈ) தற்காலம்

3. ‘கவிதை வாழ்க்கையின் திறனாய்வு’ என்று கூறியவர்

(அ) மாக்ஸ்முல்லர்

(ஆ) ஆர்னால்டு

(இ) பாவாணர்

(ஈ) கண்ணதாசன்

4. சங்கப் பாடல்களில் அறம் பற்றிய அறிவுரைகள் யாரை முதன்மைப்படுத்தி உள்ளன?

(அ) மக்கள்

(ஆ) அமைச்சர்கள்

(இ) வீரர்கள்

(ஈ) அரசர்கள்

5. சங்ககாலத்தில் அறத்தின் குறியீடுகளாக இருந்தவை

(அ) செங்கோல், வெண்கொற்றக்குடை

(ஆ) வெண்கொற்றக்குடை, படைக்கருவிகள்

(இ) அரண்மனை, கோட்டை

(ஈ) மதில்சுவர், செங்கோல்

6. அறம் பற்றிய சங்ககால மக்களின் கருத்து

(அ) அறத்தின் பயனை மறுபிறப்பில் பெறலாம்.

(ஆ) அறத்தில் வணிக நோக்கம் இருக்கக் கூடாது.

(இ) ஒரு நோக்கத்தோடு அறம் செய்ய வேண்டும்.

(ஈ) அறம் செய்து புகழ் பெற வேண்டும்.

7. சங்க இலக்கியம் அரசனின் கடமையாகக் கூறுவது

(அ) நீர்நிலை பெருக்குதல்

(ஆ) நிலவளம் காணுதல்

(இ) உணவுப் பெருக்கம் செய்தல்

(ஈ) மேற்கண்ட இம்மூன்றும்

8. இரண்டு  அடிகளைப் பெற்று வருவது

(அ) கலிவெண்பா

(ஆ) ஆசிரியப்பா

(இ) குறள் வெண்பா

(ஈ) நேரிசை வெண்பா

9. மரபுத் தொடருக்கான பொருளைப் பொருத்துக.

1. கயிறு திரித்தல் - (அ) அதிகமாகப் பேசுதல்

2. கொட்டி அளத்தல் - (ஆ) சொல்லாமல் செல்லுதல்

3. முதலைக் கண்ணீர் - (இ) பொய் கூறுதல்

4. கம்பி நீட்டுதல் - (ஈ) பொய்யழுகை

(அ) 1-, 2-, 3-, 4-

(ஆ) 1-, 2-, 3-, 4-

(இ) 1-, 2-, 3-, 4-

(ஈ) 1-, 2-, 3-, 4-

10. ‘தார்’ என்னும் ஈற்றுச் சீரின் வாய்பாடு

(அ) மலர்

(ஆ) நாள்

(இ) காசு

(ஈ) பிறப்பு

11. மரபுத் தொடருக்கான பொருளைப் பொருத்துக.

1. மனக்கோட்டை - (அ) வெறும் கற்பனை

2. கண்ணும் கருத்தும் - (ஆ) காலம் தாழ்த்துதல்

3. அள்ளி இறைத்தல் - (இ) முழுக்கவனம்

4. ஆறப்போடுதல் - (ஈ) அளவில்லாமல் செலவு செய்தல்

(அ) 1-அ, 2-, 3-ஆ, 4-

(ஆ) 1-, 2-, 3-, 4-

(இ) 1-, 2-, 3-, 4-

(ஈ) 1-அ, 2-இ, 3-ஈ, 4-ஆ

12. தவறான இணையைத் தெரிவு செய்க.

(அ) மா முன் நேர் – நேரொன்றாசிரியத்தளை    

(ஆ) விள முன் நேர் – இயற்சீர் வெண்டளை

(இ) காய் முன் நிரை – நிரையொன்றாசிரியத்தளை

(ஈ) கனி முன் நிரை – ஒன்றிய வஞ்சித்தளை

13. கூற்று 1: சங்ககால வாழ்க்கையில் இருந்து உருவான அறங்களே சங்க இலக்கியத்தில் பதிவு பெற்றுள்ளன.

கூற்று 2: சங்க அறங்கள் சமயங்களிடமிருந்து இரவல் பெறப்பட்டவை அல்ல.

(அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு

(ஆ) கூற்று 1 தவறு, கூற்று 2 சரி

(இ) கூற்று 1, 2 தவறு

(ஈ) கூற்று 1, 2 சரி     

14. “எறியார் எறிதல் யாவணது எறிந்தோர்

எதிர்சென்று எறிதலும் செல்லான்” என்னும் புறநானூற்று அடிகள் உணர்த்தும் அறம்

(அ) அரசியல் அறம் 

(ஆ) கொடை அறம்

(இ) போர் அறம்

 (ஈ) வணிக அறம்

15. ‘தம்மைவிட வலிமை குறைந்தாரோடு போர் செய்தல் கூடாது’ எனக் கூறியவர்

(அ) மாங்குடி மருதனார்

(ஆ) ஏணிச்சேரி முடமோசியார்

(இ) ஆவூர் மூலங்கிழார்

(ஈ) நக்கீரனார்

விடைக்குறிப்பு

1 - இ

2 - ஆ

3 - ஆ

4 - ஈ

5 - அ

6 - ஆ

7 - ஈ

8 - இ

9 - ஆ

10 - ஆ

11 - ஈ

12 - இ

13 - ஈ

14 - இ

15 - இ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பத்தாம் வகுப்பு - தமிழ்

  கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான சிறுதேர்வு. FLT Test - 03.02.2026, செவ்வாய் PDF வடிவில் DOWNLOAD HERE