TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST
தேர்வு - 53
01. இஸ்மத் சன்னியாசி - எம்மொழிச் சொல்?
(அ) உருது
(ஆ) தெலுங்கு
(இ) பாரசீக
(ஈ) சமஸ்கிருத
02. ‘இஸ்மத் சன்னியாசி’ என்னும் சொல்லின் பொருள் என்ன?
(அ) புனிதன்
(ஆ) ஆசான்
(இ) தாசன்
(ஈ) தூய துறவி
03. தேம்பாவணி …… காண்டங்களையும் ………. படலங்களையும் …………பாடல்களையும்
கொண்டது.
(அ) 6, 15, 3200
(ஆ) 3, 36, 3615
(இ) 3, 30, 3610
(ஈ) 4, 36, 3615
04. கருணையனின் தாய்
(அ) எலிசபெத்
(ஆ) மரியாள்
(இ) அன்னை
(ஈ) யோவாள்
05. வீரமாமுனிவரின் இயற்பெயர்
(அ) கால்டுவெல்
(ஆ) திருமுழுக்கு யோவான்
(இ) கான்சுடான்சு சோசப் பெசுகி
(ஈ) அருளப்பன்
06. தமிழின் முதல் அகராதி
(அ) கலைச்சொல் அகராதி
(ஆ) சதுரகராதி
(இ) பொருள் அகராதி
(ஈ) செய்யுள் அகராதி
07. வீரமாமுனிவர் எந்த நூற்றாண்டைச் சார்ந்தவர்?
(அ) 15
(ஆ) 12
(இ) 19
(ஈ) 17
08. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி யார்?
(அ) சூசையப்பர்
(ஆ) அருளப்பன்
(இ) எலிசபெத்
(ஈ) வளன்
09. நவமணி என்னும் சொல்லில் ‘நவம்’ என்பது
(அ) எட்டு
(ஆ) ஒன்பது
(இ) ஐந்து
(ஈ) ஆறு
10. கிறித்துவின் வளர்ப்புத் தந்தை
(அ) சூசையப்பர்
(ஆ) வீரமாமுனிவர்
(ஈ) கருணையன்
(ஈ) அருளப்பன்
11. தேம்பாவணியை தேம்பா+அணி
என பிரிக்கும்போது அதன் பொருள்
(அ) தேன்மாலை
(ஆ) வாடாதமாலை
(இ) பூமாலை
(ஈ) அணிகலன்
12. பொருத்துக.
1. குணதரன் - (அ) மிகுதி
2. செவ்வை - (ஆ) படி
3. நகல் - (இ) நற்குணமுடையவன்
4. பூட்கை - (ஈ) கொள்கை
(அ) 1-இ, 2-அ, 3-ஆ, 4-ஈ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ
(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
13. கரிசல் எழுத்தாளர்களில் மூத்தவர்
(அ) கி.இராஜநாராயணன்
(ஆ) கு.அழகிரிசாமி
(இ) கு.ப.இராஜகோபாலன்
(ஈ) தி.சொ.வேணுகோபால்
14. ஒருவன் இருக்கிறான் சிறுகதையின் ஆசிரியர்
(அ) கி.இராஜநாராயணன்
(ஆ) கு.அழகிரிசாமி
(இ) கு.ப.இராஜகோபாலன்
(ஈ) தி.சொ.வேணுகோபால்
15. “ஆக்கையை அடக்கிப் பூவோடு அழுங்கணீர் பொழிந்தான்” இவ்வடியில்
உள்ள கணீர் என்பதற்கு இலக்கணக்குறிப்பு தருக.
(அ) மெய்ம்மயக்கம்
(ஆ) இடைக்குறை
(இ) பண்புத்தொகை
(ஈ) வினைத்தொகை
16. பொருத்துக.
1. தேம்பாவணி - (அ) இலக்கண நூல்
2. சதுரகராதி - (ஆ) காப்பியம்
3. தொன்னூல் விளக்கம் - (இ) அகராதி நூல்
(அ) 1-ஆ, 2-இ, 3-அ
(ஆ) 1-இ, 2-ஆ, 3-அ
(இ) 1-ஆ, 2-அ, 3-இ
(ஈ) 1-அ, 2-இ, 3-ஆ
17. பொருத்தமான நிறுத்தற்குறிகள் அமைந்த தொடரைத் தெரிவு செய்க.
(அ) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன் மலையமான் போன்றவை
குறிப்பிடத்தக்கவை
(ஆ) சேரர்களின் பட்டப் பெயர்களில் கொல்லி வெற்பன், மலையமான், போன்றவை
குறிப்பிடத்தக்கவை.
(இ) சேரர்களின் பட்டப் பெயர்களில், கொல்லி வெற்பன்; மலையமான் போன்றவை
குறிப்பிடத்தக்கவை.
(ஈ) சேரர்களின் பட்டப் பெயர்களில், ‘கொல்லி வெற்பன்’, ‘ மலையமான்’
போன்றவை குறிப்பிடத்தக்கவை.
18. ஜெயகாந்தன் நூல்களை அதன் வகையோடு பொருத்துக.
1. ஒரு பிடி சோறு - (அ) வாழ்க்கை வரலாறு
2. ரிஷிமூலம் - (ஆ) சிறுகதை
3. சுந்தர காண்டம் - (இ) குறும்புதினம்
4. ஒரு கதாசிரியனின் கதை - (ஈ) புதினம்
(அ) 1-இ, 2-அ, 3-ஆ, 4-ஈ
(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ
(இ) 1-ஆ, 2-இ, 3-ஈ, 4-அ
(ஈ) 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ
19. நாகூர் ரூமியின்
இயற்பெயர்
(அ) அப்துல் ரகுமான்
(ஆ) முகமது மன்சூர்
(இ) முகம்மது ரஃபி
(ஈ) முகம்மது மீரான்
20. செங்கல் இலக்கணக்குறிப்பு தருக.
(அ) வினைத்தொகை
(ஆ) பண்புத்தொகை
(இ) உரிச்சொல்
(ஈ) உம்மைத்தொகை
விடைக்குறிப்பு
1 - இ
2 - ஈ
3 - ஆ
4 - அ
5 - இ
6 - ஆ
7 - ஈ
8 - ஆ
9 - ஆ
10 - அ
11 - ஆ
12 - அ
13 - ஆ
14 - ஆ
15 - ஆ
16 - அ
17 - ஈ
18 - இ
19 - இ
20 - ஆ
கருத்துகள்
கருத்துரையிடுக