ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

தேர்வு - 38

01. திருக்குறளின் கருத்துப்படி பின்வரும் கூற்றை ஆய்க.

கூற்று 1: கயவர் மக்களைப் போலவே இருப்பர்.

கூற்று 2: கயவர்க்கும் மக்களுக்குமான தோற்ற ஒப்புமை வேறெதிலும் பார்க்கமுடியாது.

(அ) கூற்று 1 சரி; கூற்று 2 தவறு.

(ஆ) கூற்று 1 தவறு; கூற்று 2 சரி.

(இ) கூற்று 1, 2 சரி.

(ஈ) கூற்று1, 2 தவறு.

02. திணைக்குரிய தெய்வங்களைப் பொருத்துக.

1. குறிஞ்சி - (அ) திருமால்

2. முல்லை   - (ஆ) கொற்றவை

3. மருதம் - (இ) முருகன்

4. நெய்தல் - (ஈ) வருணன்

5. பாலை - (உ) இந்திரன்

(அ) 1-, 2-, 3-, 4-, 5-

(ஆ) 1-, 2-, 3-, 4-, 5-

(இ) 1-, 2-, 3-, 4-, 5-

(ஈ) 1-, 2-, 3-, 4-, 5-

03. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று யார் பெருமைப்படுகிறார்?

(அ) பாரதிதாசன்

(ஆ) பாரதியார்

(இ) செய்குதம்பிப் பாவலர்

(ஈ) ம.பொ.சிவஞானம்

04. கம்பர் தம் நூலுக்கு இட்ட பெயர் ........................

(அ) கம்பராமாயணம்

(ஆ) இராமாயணம்

(இ) இராமாவதாரம்

(ஈ) இவற்றில் எதுவுமில்லை

05. கரப்பிடும்பை இல்லார் - இத்தொடர் உணர்த்தும் பொருள் யாது?

(அ) துன்பம் தருபவர்

(ஆ) பொருளை மறைத்து வைக்காதவர்

(இ) ஏளனம் செய்யாதவர்

(ஈ) கயவர் போன்றவர்

06. ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல் .................. பாய்கிறது என்கிறார் கம்பர்.

(அ) கங்கை ஆறு

(ஆ) சரயு ஆறு

(இ) காவிரி ஆறு

(ஈ) சிந்து ஆறு

07. தமிழெண்ணால் நிரப்புக. கம்பராமாயணம் ......................... காண்டங்களைக் கொண்டது.

(அ) ௩௦

(ஆ)

(இ)

(ஈ) ௧௦

08. மருத நிலத்திற்குரிய உணவுகள் ................

(அ) மலைநெல், தினை

(ஆ) செந்நெல், வெண்ணெல்

(இ) வரகு, சாமை

(ஈ) மீன், உப்புக்குப்பெற்ற பொருள்

09. திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பட்டவர் யார்?

(அ) செய்குதம்பிப் பாவலர்

(ஆ) கம்பர்

(இ) குலசேகராழ்வார்

(ஈ) இளங்கோவடிகள்

10. ஏறுதழுவுதல் எந்திலத்திற்குரிய தொழில்?

(அ) முல்லை

(ஆ) குறிஞ்சி

(இ) மருதம்

(ஈ) நெய்தல்

11. விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் ...................

(அ) பாரதி

(ஆ) இளங்கோவடிகள்

(இ) கம்பன்

(ஈ) வீரமாமுனிவர்

12. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

(அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

(ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

(இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

(ஈ) அங்கு வறுமை இல்லாததால்

13. பின்வருவனவற்றுள் கூரான ஆயுதம் எது என்று செந்தாப்போதார் கூறுகிறார்?

(அ) பெரிய கத்தி

(ஆ) இரும்பு ஈட்டி

(இ) உழைத்ததால் கிடைத்த ஊதியம்

(ஈ) வில்லும் அம்பும்

14. தஞ்சம் எளியர் பகைக்கு - இவ்வடிக்குரிய வாய்பாடுகளைத் தெரிவு செய்க.

(அ) புளிமா தேமா மலர்

(ஆ) தேமா புளிமா காசு

(இ) தேமா தேமா பிறப்பு

(ஈ) தேமா புளிமா பிறப்பு

15. குளிர்காலத்தைப் பொழுதாகக் கொண்ட நிலங்கள் ..................

(அ) முல்லை, குறிஞ்சி, மருத நிலங்கள்

(ஆ) குறிஞ்சி, பாலை, நெய்தல் நிலங்கள்

(இ) குறிஞ்சி, மருதம், நெய்தல் நிலங்கள்

(ஈ) மருதம், நெய்தல், பாலை நிலங்கள்

விடைக்குறிப்பு

1 - இ

2 - இ

3 - ஆ

4 - இ

5 - ஆ

6 - ஆ

7 - இ

8 - ஆ

9 - ஆ

10 - அ

11 - இ

12 -ஈ

13 - இ

14 - ஈ

15 - இ



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பத்தாம் வகுப்பு - தமிழ்

  கவனம் தேவைப்படும் மாணவர்களுக்கான சிறுதேர்வு. FLT Test - 03.02.2026, செவ்வாய் PDF வடிவில் DOWNLOAD HERE