TET & PG TRB - TAMIL ELIGIBILITY TEST

 தேர்வு - 43

01.  சிலப்பதிகாரம் ……. காண்டங்களையும் ……… காதைகளையும் கொண்டது.

(அ) 6, 30

(ஆ) 3, 15

(இ) 3, 30

(ஈ) 10, 25

02. சிலப்பதிகாரத்தோடு தொடர்பில்லாதது எது?

(அ) முத்தமிழ்க் காப்பியம்

(ஆ) குடிமக்கள் காப்பியம்

(இ) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள்

(ஈ) புரட்சிக்காப்பியம்

03. பொருத்துக.

1. காருகர் - (அ) ஓவியர்

2. மண்ணுள் வினைஞர் - (ஆ) சிற்பி

3. துன்னகாரர் - (இ) நெசவாளர்

4. மண்ணீட்டாளர் - (ஈ) தையற்காரர்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ

(இ) 1-அ, 2-இ, 3-ஈ, 4-ஆ

(ஈ)  1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ

04. பொருத்துக.

1. தச்சர் - (அ) இரத்தின வேலைசெய்பவர்

2. கொல்லர் - (ஆ) வெண்கல வேலைசெய்பவர்

3. கஞ்சகாரர் - (இ) இரும்பு வேலைசெய்பவர்

4. நன்கலம்தருநர் - (ஈ) மர வேலைசெய்பவர்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ

(இ) 1-அ, 2-இ, 3-ஈ, 4-ஆ

(ஈ)  1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

05. ஒருமை, பன்மை பிழைகளற்ற தொடரைத் தெரிவு செய்க.

(அ) அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்.

(ஆ) அரசர்கள் தன் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்.

(இ) அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்.

(ஈ) அரசன் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்.

06.   பொருத்துக.

1. பரதவர் - (அ) உப்பு விற்போர்

2. பாசவர் - (ஆ) எண்ணெய் விற்போர்

3. ஓசுநர் - (இ) வெற்றிலை விற்போர்

4. உமணர் - (ஈ) மீன் விற்போர்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஆ, 3-ஈ, 4-அ

 (இ) 1-அ, 2-இ, 3-ஈ, 4-ஆ

(ஈ) 1-ஈ, 2-இ, 3-ஆ, 4-அ

07. பொருத்துக.

1. தூசு - (அ) சந்தனம்

2. துகிர் - (ஆ) நறுமணப்பொடி

3. ஆரம் - (இ) பட்டு

4. சுண்ணம் - ஈ) பவளம்

(அ) 1-இ, 2-அ, 3-ஈ, 4-ஆ

(ஆ) 1-இ, 2-ஈ, 3-அ, 4-ஆ

(இ) 1-ஆ, 2-அ, 3-ஈ, 4-இ

(ஈ) 1-ஈ, 2-அ, 3-இ, 4-ஆ

08. வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் சித்திரைத் திங்களில் நடத்தப்படும் தமிழரின் பண்பாட்டு மகுடம்

(அ) ஏறு தழுவுதல்

(ஆ) விருந்தோம்பல்

(இ) பொன்ஏர் பூட்டுதல்

(ஈ) அறம் செய்தல்

09. தமிழரசு கழகத்தைத் தொடங்கியவர்

(அ) மங்கலங்கிழார்

(ஆ) கே.எம்.பணிக்கர்

(இ) ம.பொ.சிவஞானம்

(ஈ) மார்ஷல் ஏ.நேசமணி

10. புறத்திணைகள் ……….. வகைப்படும்.

(அ) 5

(ஆ) 8

(இ) 12

(ஈ) 15

11. ஆநிரைகளை மீட்டுவரும்போது வீரர்கள் சூடும் பூ

(அ) வெட்சி

(ஆ) கரந்தை

(இ) வஞ்சி

(ஈ) காஞ்சி

12. அரசர்களின் கோட்டைகளோடு தொடர்புடைய புறத்திணைகள்

(அ) நொச்சி, உழிஞை

(ஆ) உழிஞை, பாடாண்

(இ) வெட்சி, கரந்தை

(ஈ) கைக்கிளை, பெருந்திணை

13. இட்லிப்பூ என அழைக்கப்டுவது

(அ) வெட்சி

(ஆ) கரந்தை

(இ) வஞ்சி

(ஈ) காஞ்சி

14. வெற்றி பெற்ற மன்னன் சூடும் பூ

(அ) தும்பை

(ஆ) கரந்தை

(இ) வாகை

(ஈ) காஞ்சி

15. ஆண்மகனின் வீரத்தைப் பாடுவது

(அ) பாடாண்

(ஆ) வஞ்சி

(இ) காஞ்சி

(ஈ) தும்பை

விடைக்குறிப்பு

1 - இ

2 - ஈ

3 - ஆ

4 - ஈ

5 - அ

6 - ஈ

7 - ஆ

8 - இ

9 - ஈ

10 - இ

11 - ஆ

12 - அ

13 - அ

14 - இ

15 - அ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பத்தாம் வகுப்பு - தமிழ்

பத்தாம் வகுப்பு - தமிழ்